ads

Friday, April 4, 2014

ராசாத்தி – திகில் படம் – திரைக்கதை முயற்சி


ராசாத்திதிகில் படம்திரைக்கதை




வெள்ளிக்கிழமை, இரவு 11:50.    
அவருக்கு வயது 60. கருப்பான, குண்டான, குட்டையான, சற்றே அவலட்சணமான உருவம். பணக்காரர் என்ற பளிச் தோற்றம். இரவுநேர மதுபான விடுதியில் இருந்து குடி போதையில் தள்ளாடியபடி வருகிறார். தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு சாலையில் அவர் வேகமாகச் செல்லும் போது செல்போன் அழைக்கிறது.
என்னங்கஎங்க இருக்கீங்க? உடனே வாங்க...
என்னடி அவசரம்? உங்காத்தா இன்னொருதடவை செத்துப் போயிட்டாளா?”
என்னங்க... பயமாயிருக்குங்க...
        அவர் பேசிக்கொண்டிருக்கும்போது செல்போன் தவறி காரினுள் விழ, கார் ஓட்டும் அவரது கவனம் சிதறிவிடுகிறது. கார் சாலையில் ஓரமாக சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது மோதி பயணத்தை தொடர்கிறது. காரின் வேகம் இயல்பாக குறைகிறது.
        காரில் இருந்தபடி அவர் திரும்பிப்பார்க்க, விபத்துக்குள்ளான பெண் சாலையின் ஓரம் புதர்ச்செடிகளுக்கு இடையில் தூக்கி எறியப்பட்டு ரத்தச்சகதியில் துடித்துக்கொண்டு இருக்கிறாள். அவர் பயணத்தை தொடர்கிறார்.
        அது இரவு நேரம் என்பதும், ஆள் அரவமற்ற பகுதி என்பதும் அவருக்கு வசதியாய் போய்விடுகிறது.
கார் அரைகிலோ மீட்டர் தள்ளிச்சென்று கட்டிடம் கட்டுவதற்காக குவிக்கப்பட்டிருந்த மணலில் சென்று சொருகி சிக்கி நிற்கிறது. போதை நபர் கதவைத் திறந்து வெளியே வந்து விழுகிறார்.
Help me… Help me…” அவர் அரைமயக்கத்தில் பிதற்றுகிறார்.
அவ்வழியே 3 இளைஞர்கள் இரவுக்காட்சி பார்த்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்.
மச்சான், சின்ன படந்தான். ஆனால் கொடுத்த காசுக்கு மேலேயே தரமா இருக்குஎன்ன சொல்றே? ”  
அவர்கள் போதை ஆசாமியை பார்த்துவிட்டு உதவ முன் வருகின்றனர்.
இருவர் போதை ஆசாமியை தூக்கிவிட, ஒருவர் காரை ரிவாசில் எடுக்கிறார்.
போதை ஆசாமியை கைத்தாங்கலாக தூக்கிக் கொண்டு காரில் படுக்க வைக்கின்றனர். அவர் முழுமயக்கத்தில் ஆழ்கிறார்.
இளைஞர்கள் வேறு வழியின்றி அவரை தாங்கள் தங்கி படிக்கும் வாடகை வீட்டிற்கு கூட்டிச்செல்கின்றனர்.
டேய், சிவாஉனக்கு கார் ஓட்டத்தெரியுமா? சொல்லவே இல்லை. பின்னால் அமாந்து குடிகாரரை பிடித்தபடி வரும் இளைஞன் கேட்கிறான்.
நீ கேட்கவே இல்லைபேசாம வாடா. வம்பை விலைகொடுத்து வாங்கறோமோன்னு தோணுது எனக்கு. நீ வேறே…”
மற்றொரு இளைஞன் காரில் dashboard அருகில் பெட்டியில் இருக்கும் cd - க்களை எடுத்துக்கொள்கிறான்.
மொறைக்காதே! copy பண்ணிட்டு வைச்சிடறேன். reverse view mirror பார்த்து பின்னால் இருப்பவனிடம் பேசுகிறான்.

        அங்கே விபத்து நடந்த இடத்தில், விபத்தில் சிக்கிய பெண்ணின் உடல் வெட்டி, வெட்டி இழுக்கிறது. சிறிது தொலைவில் அவள் கையில் வைத்திருந்த உணவுப்பொட்டலம் விழந்து கிடக்கிறது. அங்கே வரும் பிச்சைக்காரன் ஒருவன், துடிக்கும் அந்த பெண்ணைப் பார்த்து விட்டு எந்த உணர்ச்சியுமில்லாமல் நகர்ந்து, அந்த உணவுப்பொட்டலத்தை எடுத்துச் செல்கிறான்.

        இங்கே, அந்த இளைஞர்கள், குடிகாரரை மெத்தையில் கிடத்தி, சூ, சாக்ஸ் மற்றும் கோட் ஆகியவற்றை கழற்றி, தலைக்கு தலையனை வைத்து வசதியா­­­­­க படுக்க வைக்கின்றனர். ஒருவன் ஃபேனை போடுகிறான். ஒருவன் காற்றோட்டமாக இருக்கட்டும் என்று ஜன்னலைத் திறக்கிறான். பிறகு mosquito vaparouriser - ஐ on செய்கிறான். பின்னர் அவர்கள் மூவரும் அந்த அறையை விட்டு வெளியேறுகின்றனர்.
        அந்த வீட்டில் மேலும் இரு இளைஞர்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களில் ஒருவன் நடப்பது எதையும் கண்டுகொள்ளாமல் தனது படிப்பில் மட்டும் கவனமாக இருக்கிறான். மற்றொருவன் சோபாவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறான்.

        அங்கே, பைக் ஒன்று கிரீச்சிட்டு நிற்க, பைக்கின் பின்னால் அமரந்திருப்பவர் அவசரமாய் சிறுநீர் கழிக்க ஒதுங்கிறார்.
        முனகல் சத்தம் கேட்டு, விபத்தில் சிக்கிய பெண்ணை பார்க்கிறார். பிறகு ஒரு முடிவுடன் வேகமாய் திரும்புகிறார்.
        என்னஅதுக்குள்ள ஆச்சா…?”
        ஆச்சு. ஆச்சு. வண்டிய எடு.

        இங்கே, cd - க்களை எடுத்த இளைஞன், அவற்றை ஆர்வமாக தனது லேப்டாப்பில் copy செய்து கொண்டிருக்கிறான். அருகில் மற்ற இரு இளைஞர்கள்.
        டேய், சிவா. எனக்கு ஒரு டவுட். ஒருநாள் நைட்டுல கார் ஓட்டிப்பழகிறலாமா…?” மற்றொரு இளைஞன் சிவாவிடம் தயக்கமாகவும், ஆர்வமாகவும் கேட்கிறான்.
        குமாரு, ஓங்கி மிதிக்கிறதுக்குள்ள ஓடியே போயிரு…”
        இரவு நேரம் கடக்க விடிய ஆரம்பிக்கிறது.

        அங்கே மழை தூறுகிறது.

        இங்கே குடிகாரர் எழுந்து, முந்தின நாள் இரவு நடந்த விபரீதத்தை நினைவில் கொள்கிறார். பிறகு தலையை பிடித்துக் கொள்கிறார்.
        ஒரு முடிவுடன் எழுகிறார்.
        சோபாவிலும், தரையிலுமாக ஆங்காங்கே தூங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களை பார்க்கிறார். அதில் ஒருவன் அணிந்திருக்கும் கண்ணாடியைக்கூட கழட்டாமல், நெஞ்சில் கவிழ்த்த புத்தகத்தை அணைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான்.
        அவர் சோபாவில் படுத்திருக்கும் இளைஞரை எழுப்புகிறார். சோம்பலாக எழும் அவனுக்கோ இவர் யார் என்றே தெரியவில்லை.
        அங்கிள் , நீங்க சிவாவோட ரிலேட்டிவ்வா…?”
        அவருடைய கரிய நிறத்தை கருத்தில் கொண்டு கேட்கிறான். அது அவர் காதில் விழாமல் போக, மீண்டும் கேட்க எத்தனிக்கும் போது, அவர் கேட்கிறார்.
        தம்பி, டூத் பேஸ்ட் இருக்கா…?”
        இருக்கு அங்கிள். புது பிரஷ்கூட இருக்கு. வேணுமா அங்கிள்?”
        கொடுப்பா…”
        தம்பி, நீங்க எவ்வளவு பொய உதவி பண்ணியிருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியாது. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்ப்பா
        அவன் குழப்பத்துடன் நிற்கிறான்.
        அவர் குளிக்கும்போது ஹீட்டரை போடுகிறான். அவர் குளித்துவிட்டு வந்தபிறகு காப்பி போட்டு கொடுக்கிறான்.
        அவர், காப்பியைக் குடித்துவிட்டு, மற்றவர்களை எழுப்பி, தொந்தரவு கொடுக்கவேண்டாமென்று அந்த இளைஞனிடம் கேட்டுக் கொண்டு, தனது பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு காருடன் விடை பெறுகிறார்.

        அங்கே, விபத்து நடந்த இடத்தில், கான்ஸ்டபிள் ஒருவர் கூடியிருக்கும் கூட்டத்தில் விசாரிக்கிறார்.
        ஆக்சிடண்ட் கேஸ்சுன்னு பளிச்சின்னு தெரியுது. Hit and run. யாருப்பா துணியை போர்த்தினது.
        நாந்தாங்க. பேரு மாரிமுத்து. பக்கத்தில பெட்டிக்கடை வச்சிருக்கேன். நாந்தான் போலீசுக்கும் தகவல் சொன்னேன்.
        யோவ், அறிவிருக்கா உனக்கு? உன் வீட்டுல துணி நிறைய இருந்தா, எடுத்துட்டு வந்து, தலையில இருந்து கால் வரை போர்த்திருவியா…? அந்த பொம்பளைக்கு இன்னும் உசிர் இருக்கு. மூர்த்தி, ஆம்புலென்சுக்குச் சொல்லு.



        பெரிய பங்களாவின் பெரிய ஹாலில் குடிகாரர் , வேலைக்காரருடன் பேசிக்கொண்டிருக்கிறார். வேலைக்காரருக்கு ஒல்லியான உருவம். வயது 58.
        ஐயா! அம்மா விடிய, விடிய துங்கலை. லைட் எரிஞ்சுக்கிட்டே இருந்துச்சுகொட்ட, கொட்ட டி.வி பார்த்துக்கிட்டு இருந்திருப்பாங்க போலசத்தம் தொடாச்சியா கேட்டுகிட்டே இருந்துச்சு…”
        அது சரி அவ செல்நம்பர் கேட்டு தொந்திரவு செஞ்சாளா…?”
        திரும்பத்திரும்ப கேட்டாங்கநான் சொல்லவே இல்லை.
        தனியா இருக்காளாஅதுதான், ரொம்ப பயந்திட்டா போல…”
        இப்பல்லாம் ரொம்பவே தொந்திரவு கொடுக்கிறாங்க…”
        சரிசரிஒரு நாலஞ்சிநாள் பொறுத்துக்கோஅப்புறம், அவ எந்திரிச்சான்னா ஸ்பெசல் காபி குடு. நல்லாத்துங்கட்டும்.
        பார்ட்டியை வீட்டுக்கே வரச் சொல்லியிருக்கீங்களா?”
        இல்லையில்லை. நான் மூட் அவுட்ல இருக்கேன். இன்னைக்கு என்னால இவளை சமாளிக்க முடியாது. இராத்திரி ஏன் வீட்டுக்கு வரலைன்னு ஆரம்பிச்சா, ஆயிரம் கேள்வி கேட்பாள்.
        வேலைக்காரன் புரிந்துகொண்டவனாக தலையாட்டுகிறான்.
        புது வேலைக்காரிக்கு சொல்லியிருக்கியா…?”
        இரண்டு நாள்ல வந்திருவாங்கய்யா…”
        சரி. நான் ரெஸ்ட் எடுக்கணும். யாரும் என்னை கேட்டா, ஊருக்குப் போயிருக்காருன்னு சொல்லி சமாளி.
        சரிங்கய்யா…”
        சரி. என்னை ராத்திரி வந்து பார். இல்லையில்லைநாளைக்கு காலையில் வந்து பார். உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும்வரும்போது தமிழ், இங்கிலிஷ் பேப்பர் எல்லாத்தையும் வாங்கிட்டு வா...”.
        பிறகு அவர் மது அருந்தச்செல்கிறார்.
        வேலைக்காரன் சமையலறைக்குச் சென்று காபி போடுகிறான். காபியில் தூக்க மாத்திரையை கலக்கிறான். பிறகு எஜமானியின் அறைக்குக்குள் செல்கிறான். எஜமானி மருதம்மாளிடம் காபியை கொடுக்கிறான். அவள் டி.வி பார்த்தபடி காபியை அருந்துகிறாள். சிறிது நேரம் கழித்து, அவள் அமர்ந்திருக்கும் சோபாவிலேயே மயங்கிவிடுகிறாள். சுந்தரம் வருகிறான். அவளை சோபாவிலேயே படுக்க வைக்கிறான். கலைந்திருக்கும் ஆடைகளை சரி செய்கிறான். ஃபேனை போடுகிறான்.
பிறகு வெளியே வருகிறான்.
        பங்களாவின் ஆடம்பரம் காட்டப்படுகிறது.
        வேலைக்காரன் நடந்தபடி செல்போனில் பேச ஆரம்பிக்கிறான்.
        அக்கா, நாந்தான் சுந்தரம் பேசறேன். நீ எப்ப வாறே…? நீ எதுக்கும் பயப்படாதேநான் இருக்கேன். பேருக்குத்தான் நான் வேலைக்காரன். நான் இங்க ராஜா மாதிரி இருக்கேன். நீ முதல்ல வாவேலை பிடிக்கலையின்னா எப்ப வேணும்னாலும் போஉன் மகள் கல்யாணத்துக்கு நான் பொறுப்பு. சரி. தனியா வீடு பார்த்து தாறேன். 5.30 க்கு போயிரலாம். ஆனால் காலையில் சீக்கிரமா வரவேண்டியிருக்கும். நீ என் பெரியம்மா பொண்ணுங்கிறதை சொல்லிக்க வேணாம்.
        பேசியபடியே அவன் தான் தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸ் செல்கிறான்.
        தொடாந்து பேச்சு சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
        ----------------


        மறுநாள் காலை 7 மணி. ஐந்து இளைஞர்கள் தங்கியிருக்கும் வீடு. அது ஒரு விடுமுறை நாள் என்பதால் அனைவரும் அசதியாக தூங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒருவன் மட்டும் எழுந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறான். திடீரென்று மற்ற இளைஞர்களை அவசரமாக எழுப்புகிறான்.
        டேய், எந்திரிங்கஇங்க பாருங்க.
மற்ற நால்வரும் சலிப்போடு எழுந்து ஒன்று கூடுகின்றனர்.
        இந்த நீயுசைப்பாருங்க. நம்ம ஏரியா நீயுஸ்தான்அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் படுகாயம். விடிய, விடிய உயிருக்கு போராடியவர், விடிந்தபின் மீட்பு. உடல்நிலையில் முன்னேற்றம். முந்தாநாள் நாம படம் பார்த்துட்டு வந்தோமேஅதே தெருதான். நம்மக்கிட்ட சொல்லாமல், கொள்ளாமல் ஓடிப்போச்சேஅந்த குடிகாரப்பயலோட வேலையாத்தான் இருக்கும்.
        நான் அப்பவே நினைச்சேன். அந்தாள்கிட்டே ஏதோ தப்பு இருக்கிறதனாலதான் சொல்லாமல், கொள்ளாமல் ஓடிப் போயிருக்கான். டேய், விஜி. அந்த ஆள் உங்கிட்ட என்ன பேசினான். விளக்கமாச் சொல்லு…”
        எத்தனை தடவை சொல்றது? ம்நான் புது பிரசை கொடுக்கும்போது, நீங்க எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியாதுன்னு சொன்னான். அதுதான் வித்தியாசமா இருந்துச்சு…”
        டேய், உடனே போலீசுக்கு போன் போடு. அந்தாள் கார் நம்பர் தெரியுமா?” - சிவா.
        அந்த ஆள் போ, ராமையா ரத்தினம். வண்டி நம்பர்…” - குமார்.
        டேய், போலீசுக்கெல்லாம் போக வேண்டாம். அவர் வேணும்னா மோதினாருஏதோ தெரியாம மோதிட்டாருஅதுவும் போக, நமக்கெதுக்கு வம்பு.” - ராஜா.
        என்னடா, அநியாயமா பேசறேகுடிச்சுப்புட்டு, ஏடாகூடாம வண்டி ஓட்டி, அடுத்தவங்க உயிரோட விளையாடற இந்த மாதிரி ஆளுங்களை கட்டாயம் கடுமையா தண்டிக்கணும்…” - விஜி.
        பேப்பர்ல என்ன போட்டிருக்கான்? அந்த பொம்பளை உயிரோடதானே இருக்காபிறகென்ன…?” - ராஜா.
        டேய், ஏண்டா மனசாட்சியில்லாம பேசறே…? அந்த இடத்தில உங்கம்மாவை வைச்சி பார்த்துட்டு பேசு…” - குமார்.
        சாரி, மச்சான். நான் இப்படி பேசறதுக்கு இன்னொரு காரணம் இருக்கு.
        ராஜா, என்னடா சொல்றே…”
        அந்தாள் ஏடிஎம் கார்டு, என் கையில் மாட்டுச்சு. முந்தாநாள் இராத்திரி அதிலிருந்து இருபதாயிரம் எடுத்துட்டேன்.
        அடப்பாவிஎப்படிடா…? பின்நம்பர்?” - சிவா
        அதுவந்து…”
        காட்சி விரிகிறது.

        குடிகாரரை ராஜா எழுப்புகிறான்.
        போதையில் பிதற்றியபடியே அவர் எழுகிறார்.
        சார், பொதுவா குடிகாரர்களுக்கு மறதி அதிகமா இருக்கும்னு சொல்றாங்களேஉண்மையா?”
        மத்தவங்களை பத்தி எனக்குத்தொயாது. குடிச்சாலும் நான் ரொம்ப ஸ்டிராங்க்பிஸிக்கலிமென்ட்டலி…”
        சரி, உங்களுக்கு மறதி இருக்காஇல்லையாபார்த்திருவோம். நான் உங்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறேன். நீங்க பிறந்த தேதி…?”
        2.4.1952
        வருடம் உட்பட அவர் சொல்ல
அவன் அடுத்த கேள்வியை கேட்கிறான்.
        உங்க ஏடிஎம் பின்நம்பர்…?”
        7135
அவன் அடுத்த கேள்வியை கேட்கிறான்.
        உங்க மனைவி வயசு…”
        அந்த கழுதைக்கு ஏழு கழுதை வயசிருக்கும். அதையே ஏன் இப்ப ஞாபகப்படுத்திற…”
        சார், உண்மையிலேயே நீங்க குடிச்சாலும் steady தான்.
நான் ரொம்ப ஸ்டிராங்க்…” புலம்பியபடி மீண்டும் துங்குகிறார்.
காட்சி முடிகிறது.


        அடப்பாவிஅதான் குப்பையைக் கிளறாதேன்னு சொன்னியா…?” - விஜி
        அது என்னடா இருபதாயிரம். மொத்தமா துடைச்சு எடுத்துற வேண்டியதுதானே… ” - குமார்.
        மச்சான், அதுதான் ஒருநாள் லிமிட். அதுக்கு மேல எடுக்கமுடியாதுநான் பணம் எடுக்கும்போது இராத்திரி மணி 12:55. ஒரு…, ஒரு மணிநேரம் முன்னாடி கார்டு கையில கிடைச்சிருந்தால் இன்னொரு இருபதாயிரம் எடுத்திருப்பேன்.
        இதுல வருத்தம் வேறயா...? நினைச்சேன்நீ cd திருடும்போதே எனக்குத்தெரியும்நீ வேற எதையாவது நோண்டுவேன்னு…”
        சரி. பிரட்சினை வந்தா நாங்க கூட்டா, உன்னைத்தான் கை காட்டுவோம்.
        தாராளமா. பணம் மொத்தத்தையும் நாந்தானே செலவு பண்ணப்போறேன். Today is my day.
        உங்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்…” - விஜி
        மவனே! மாட்டினால்…?” - குமார்
        நண்பாகளே! மாட்டினால் மாட்டி விட்டுப்போகிறேன்நான் மாட்டிக்கொள்ள, நீங்கள் மட்டும் காரணமாகி விடாதீர்கள். இதுவே என் வேண்டுகோள்.
        இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம்டா…”
        அது சரி. அக்கௌன்ட்டுல மொத்தம் எவ்வளவு இருந்திச்சு?” - ஒருவன் ஆர்வமாக கேட்கிறான்.
        13 இலட்சத்து நாப்பதாயிரம்.
       


        ராமையா ரத்தினம் அனைத்து நாளிதழ்களையும் அலசி ஆராய்ந்து திருப்தி கொள்கிறார்.
        சுந்தரம், முந்தாநாள் இராத்திரி ஒரு ஆக்சிடன்ட் பண்ணிட்டேன். பிரட்சினை ஆயிருமோன்னு பயந்தேன். பரவாயில்லை. புஸ்சுன்னு ஆயிருச்சு.
        ஐயா, மாட்டுனது எத்தனை பேரு?”
        ஒரே ஒரு பொண்ணு. நல்லவேளை பிழைச்சிருச்சு.
        சுந்தரம் சிரிக்கிறான்.
        என்னடா சிரிக்கிறே…? ஐயா, நீங்க பண்ணாத தப்பு இது ஒண்ணுதான். அதையும் செஞ்சுட்டீங்க…”
        ஓவரா பேசாதடாசரி, பாட்டிலை எடு. சாப்பிடுவோம்…”
        இருவரும் மது அருந்துகிறார்கள்.
        ஐயா, திடீர்னு வெளியே போன அம்மா திரும்பி வந்துட்டா…”
        அவ ஷாப்பிங் போயிருக்காவர லேட்டாகும். அவ திரும்பி வந்தா, பகல்லேயும் குடிக்க ஆரம்பிச்சிட்டியான்னு சத்தம் போடுவாள். இருக்கிற நிம்மதியும் போயிடும். வாய்வாய்அப்படி ஒரு வாய். அப்புறம் ஒரு விசயம் சொல்லணும். ஒரு பார்ட்டி பணம், பணம்னு படுத்தி எடுக்குது.
        சொல்லுங்கய்யா. அது யாருன்னு சொல்லுங்க. கவனிச்சரலாம்.
        ராகவின்னு போ. பணம் கேட்டு வீட்டுக்கே வந்துருவேன்னு மிரட்டறா..
        நீங்க ஆரம்பிச்ச பழக்கம்தான். அப்பப்ப பார்ட்டியை வீட்டுக்கே வரச்சொல்றீங்கஇப்ப பயப்படுறீங்க.
        அதைவிடுஅப்புறம் புதுவேலைக்காரி…”
        எப்ப வேணாலும் வரலாம்எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வான்னு சொல்லியிருக்கேன்…”

        நேரம் கடக்கிறது.
        சுந்தரம் மது மயக்கத்தில் சோபாவில் படுத்திருக்க, அவனது காலடியில் ராமையா கீழே படுத்திருக்கிறார். இருவரும் புலம்பியபடி பேசிக்கொண்டிருக்கின்றனர்.
        கேமராவின் கோணத்தில் ஒருவர் நடந்துவருகிறார். வளையல் சத்தம் அது ஒரு பெண் உருவம் என்கிறது. மயங்கிக்கிடக்கும் இருவரையும் ஜன்னல் வழியே பார்க்கிறது.
        ராமையா, அம்மா சின்னம்மா செல்நம்பரை திரும்பத்திரும்ப கேட்டாங்க. நான் சொல்லவேயில்லை.
        சொல்லிராதே... அம்மாவும் பொண்ணும் முழுசா ஒரு பத்துநாளாவது பிரிஞ்சிருக்கணும். எம்பொண்ணு என்கிட்டே ஒட்டாம இருக்கா. அதுக்கு இவதான் காரணம். நல்ல அனுபவிக்கட்டும்.
        அந்த உருவம் வாசலை நோக்கித் திரும்பி போய்விடுகிறது.
        ராமையா, டூர் போன சின்னம்மா இப்ப எந்த ஊர்ல இருக்காங்க...?”
        சிம்லா.



வடஇந்தியாவில் சுற்றுலா தலங்களில் ஒரு பாடல்காட்சி.
பாடல் இளமையைப் பற்றியதாக, நட்பைப் பற்றியததாக, சுற்றுலாத் தலங்களின் அழகைப் பற்றியதாக இருக்கிறது.
        இருபத்து ஐந்து பெண்கள் மொத்தமாக ஆடுகின்றனர். அதன் தலைவியாக, ப்ரியா ஆடுகிறாள்.
        பிறகு அவாகள் ஐந்து குழுக்களாக ஆடுகின்றனர்.
        அதில் ஒரு குழுவின் தலைவியாக ஆடும் பெணணின் மீது கேமராவின் கவனம் அதிகமாக இருக்கிறது. அவள் மோகனா.


அதிகாலை.
பெரிய ஹாலில், 25 படுக்கைகள்.
இரு பெண்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
        என்னடி அநியாயமா இருக்கு. டூருக்கு எவ்வளவு பணம் கட்டியிருக்கோம்…? இப்படி ஹாலில் படுக்க வைச்சுட்டாங்களே!
        டெல்லிலே ரூம் போட்டிருந்தாங்கல்லேஇங்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடிஎல்லாம் ஒரு அனுபவந்தானடி… ”
        ஆமாம், டெல்லிலே நீ ரூம் நம்பா 103 இல் தங்கலையே…?”
        ஆமாம். அதுதான் என் நம்பர். அதுக்கென்ன…?”
        இராத்திரி ஏதும் தொந்தரவு இருந்துச்சா…?”
        என்ன தொந்தரவு?”
        103 இல போன மாசம் ஒரு காதல் ஜோடி, தற்கொலை பண்ணிக்கிச்சாம். கேள்விப்பட்டேன். அதுதான் கேட்டேன்.
        என்னடி சொல்றே…?” திகிலுடன் கேட்கிறாள்.
        இப்ப சொல்லுடி. உனக்கு ரூம் வேணுமா? இல்லை ஹாலே போதுமா…?”
ரூம் இல்லை என சலித்துக் கொண்டவள் முழிக்கிறாள்.
        அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருத்தி அவாகளின் மேடம் தங்கியிருக்கும் அறையிலிருந்து வெளிவருகிறாள்.
        என்னடி, இவ அடிக்கடி மேடத்தை பார்க்கிறாள்.
        நாங்கூட இவளை கவனிச்சிருக்கேன். அடிக்கடி மேடத்தை பார்த்து ஏதோ பேசறா…?” - ப்ரியா.
        இவ ஒரு ஸ்பைடி…”
        யார், யார் என்னென்ன சேட்டை பண்றோம்னு கரெக்டா போட்டுக்கொடுத்திடுவா…”
        இதென்னடி பெரிய அநியாயமா இருக்கு. அப்புறம் எதுக்கு 25 பேரை 5 குழுவா பிரிச்சு, ஒவ்வொரு குழுவுக்கும் ஒருத்தரை தலைவியாப்போட்டு, கண்காணிக்கச் சொல்லி…?! ச்சேநானும் ஒரு லீடர்னு ரொம்ப பெருமையா, வேலை பார்த்தேன்.” - மோகனா.
        தலைவரை நியமிக்கிறது, வெளிப்படையான நிர்வாகம். ச்சும்மா. ஸ்பைய நியமிக்கிறது, மறைமுக நிர்வாகம். அதாண்டி ஒரிஜினல்.
        விடுடிஅரசியல்ல, இதெல்லாம் சாதாரணம்…”
        EGOLESS TEAM, DEMOCRATIC TEAM, அந்த டீம், இந்த டீம்னு படிக்கிறதெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காய்தானா?”
        மனுஷங்க கிட்ட ஒற்றுமை ஏற்படறதுக்குள்ளே, கூட்டுக்களவானித்தனம் முந்திக்கிடும்முன்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு...” - ப்ரியாவின் தோழி கனகா.
        அப்படி ஒரேடியா சொல்லிவிட முடியாது. நாட்டுல எத்தனையோ நல்ல விஷயங்களும் ஒற்றுமையால நடந்துக்கிட்டுதான் இருக்கு. அது, பார்க்கிறவங்க மனசைப் பொறுத்தது. காமாலைக்கண்ணோடு பார்த்தா எல்லாம் மஞ்சளாத்தான் தெரியும்.” - ப்ரியா.
        ப்ரியா எதார்த்தமாக சொல்லப்போக, தோழிக்கு சாதகமாக மோகனா சண்டை பிடிக்கும் உத்வேகத்தில் இருக்க, இன்னொருத்தி வருகிறாள்.
        என்னடி, காலங்காத்தால அரசியல் பேசிக்கிட்டுஅதுவும் என்ஜாய் பண்ணவேண்டிய டூர்ல, நேரத்தை வீணடிச்சுக்கிட்டுபோய் குளிங்கடி…”
        என்னது குளிக்கவா…? இந்தக் குளிர்லயா...
        இன்னொருத்தி ப்ரியாவின் காதில் ஏதோ சொல்ல
        என் bag- இல் இருக்கு. போய் எடுத்துக்கோ…”
        மோகனா அரைகுறையாய் வாரத்தைகளைக் கேட்டு புரிந்துகொள்கிறாள்.
        நீ டூர் வராம அவாய்ட் பண்ணி இருக்கலாமே…” - மோகனா.
        பாட்டி, அவ பணம், அவ கஷ்டம்உனக்கென்ன?” - ப்ரியா.
        அதுவும் போக, இதெல்லாம் லைப் டைம் oppurtunity. மிஸ் பண்ணக்கூடாது.” - லட்சுமி.
        சரி. வந்திட்டேஇதெல்லாமா ஓசி கேப்பாங்க? நீயே கொண்டு வந்து இருக்கலாமே…” - மோகனா.
        இவ யாருடி, நொய், நொய்யின்னுமறக்காம எடுத்துட்டு வந்தாஆனா, அவளுக்கு எக்ஸ்டிரா பேட் தேவை படுதுடி.” - ப்ரியா.
        எல்லாம் சரி. பிரச்சினையை எங்கிட்ட சொல்ல வேண்டியதுதானே! நாந்தானே உன் குரூப் லீடர்.”
        எங்கிட்டயும் சொல்லலாம். நான் கிளாசுக்கே லீடா. கிளாஸ் ரெப்ரசண்டேடிவ். ” - ப்ரியா.
மோகனாவிற்கு, ப்ரியாவின் மீது மேலும் மேலும் வெறுப்பு வளருகிறது.


காலை வேளை. சுந்தரம் பரிமாற, காலை உணவு உட்கொள்கிறார் ராமையா.
இன்னைக்காவது புதுவேலைக்காரி வருவாளா…?”
ஐயா, இதோ ஒரு நிமிசம். என்ன ஏதுன்னு கேட்கிறேன்.
செல்போனில் டயல் செய்தபடி நகர்கிறார் சுந்தரம்.
என்னக்கா, எப்ப வர்ற…?”
போனில் பெண் குரல். இடையிடையே வளையல் சத்தம்.
        யாரு? சுந்தரமா…?”
        எப்ப வர்றேன்னு கேட்டேன்.
        தம்பி, நான் வர்றலப்பா…”
        என்னக்காஇப்படி திடீர்னு ஒரு முடிவு. என்ன காரணம்.
        வர்றலேன்னா விடேம்ப்பா…”
        முதலாளி கேட்டா, நான் என்ன சொல்ல…?”
        …”
        சொல்லுக்காநான் ஜெயிலுக்கு போனவன்ந்தான். ஜெயிலுக்கு போனவன் திருந்தக்கூடாதா…?”
        நான் பழைய கதைக்கு போகலைப்பா…”
        ஒரு உண்மையை சொல்லட்…”
        அட, நான் பழைய கதைக்கு போகலைப்பா…”
        சரி. புதுக்கதை என்ன? அதையாவது சொல்லு பார்ப்போம்.
        நேத்து காலையில் உங்க வீட்டுக்கு வந்தேன். வாசலில் வாட்ச்மேன் இல்லை.
        இந்த வீட்டுக்கு வாட்ச்மேன், தோட்டக்காரன், டிரைவர் எல்லாம் நாந்தான். நீ மேல சொல்லு.
        ரூம்ல ஐயாவும், நீயும் தண்ணீ சாப்பிட்டுட்டு சலம்பிக்கிட்டு இருந்தீங்க. அதுவும் காலங்காத்தாலஅதுதான் இந்த இடம் நமக்கு ஒத்துவராதுன்னு திரும்பிப்போயிட்டேன்.
        அக்காஉங்கிட்ட நான் என்னத்த சொல்றது? நேத்து ஒரு நல்ல காரியம் நடந்துச்சு. ஐயாவுக்கு ரொம்ப சந்தோசம். அதான் காலையிலேயே கொண்டாடிட்டோம். இதப்போய் பெரிசுபடுத்திறீயே…”
        இல்லைப்பாஎன் மனசுக்கு…”
        அட வராட்டிப் போநீயெல்லாம் ஒரு ஆள். உனக்கு ஒரு மனசுத்தூஉனக்கு உதவி செய்யலாம்னு நினைச்சேன் பாருஎன்னைச் சொல்லணும்.
 செல்லை அணைக்கிறான்.
        ச்சே…! தேவையில்லாமல் பழைய கதையை கிளறிட்டேனே…”
        என்ன சுந்தரம், என்ன சொல்றா புதுவேலைக்காரி…?”
        அவ ஒத்து வரமாட்டாநாம பழைய வேலைக்காரியவே கூப்பிட்டுக்குவோம்.
        அவ காசு, காசுன்னு புடுங்கிறான்னு நீதானே சொன்னேசரி. என்னவோ செய்.
        சரி. நாளைக்கு காலையில் மோகனா வந்திருவாநீ கார் எடுத்துக்கிட்டுப் போய் கூட்டிட்டு வந்திரு…”
        சரிங்கய்யா…”

       
        டூர் முடிந்து மோகனா வீடு திரும்புகிறாள்.
        மருதம்மா புலம்பிக்கொண்டிருக்கிறாள்.
        அவ வரட்டும்வச்சிக்கிறேன். டூர் போறேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போக வேண்டியதுதானேநான் என்ன கிறுக்கச்சியாபுருசன்தான் ஏமாத்தறான்னாபெத்த பிள்ளையுமா ஏமாத்தணும்பேசமாட்டேன். பேசவே மாட்டேன். குறைஞ்சது ஒரு மாசம், பேச மாட்டேன். இவளுக்காகத்தான் வாழறேன். இப்படி என்னையே சீரிழிக்கிறாளே…”
        மோகனாவைப் பார்த்ததும் ஓடிச்சென்று கட்டி அணைக்கிறாள்.
        ஏண்டி இப்படி செய்தேபத்து நாளா பாடாப்படுத்திட்டீயேசெல்நம்பரை மாத்திட்டநீயாவது போன் செய்யலாம். அதையும் செய்யலை. ஏண்டி, எனக்கு இந்த தண்டனை.
        ஸாரி, மம்மி. டூர் என்ஜாய் பண்ணதுல நான் உன்னை மறந்துட்டேன். ஸாரி, மம்மி.
        செல்நம்பரை ஏண்டி மாத்தினே…?”
        சரி. சரி. அவ குளிச்சுட்டு, சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும். சாயந்திரம் பேசிக்கலாம். - ராமையா.


        சிறிது நேரம் கழித்து, மோகனாவும், ராமையாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
        டாடி, நீங்க சொன்னா மாதிரியே, பத்து நாளா, அம்மாவோட எந்த communication - னும் வச்சிக்கலை. ஸோ, நான் சவால்ல ஜெயிச்சிட்டேன். எப்ப கார் வாங்கித்தரப் போறீங்க?”
        நாளைக்கே வாங்கிடலாம்.
        தாங்க்யு டாடி.
அவர்கள் பேசுவதை மருதம்மா ஒட்டு கேட்டுவிடுகிறாள்.
        அடிப்பாவி, ஒரு காருக்கு ஆசைப்பட்டு, தாய்ப்பாசத்தையே ஏலம் விட்டுட்டீயே…! இந்த பத்து நாளா, நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். நீ டூர் போயிருக்க விசயத்தை உன் காலேஜ்ல போயி தெரிஞ்சுக்கிட்டேன். உங்கப்பனும், சுந்தரமும் வாயை திறக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க.
        அம்மா, இந்த கார் உங்களுக்காகத்தான். கார் வாங்கித்தரச் சொல்லி, அப்பாகிட்டே எத்தனை வருசமா கேட்டிருப்பீங்க…?”
        சும்மா நடிக்காதடிஎப்படியா இருந்தாலும், நீ செஞ்சது தப்புதான்.
        சரி. இன்னொருதடவை ஸாரி கேட்டுக்கிறேன். ஸாரி.
        பத்து நாளா எனக்கு பயங்கர டார்ச்சல்.
        ஐயோ, மம்மி. அது டார்ச்சர். டார்ச்சல் இல்லை.
        ஏதோ ஒண்ணு. இனிமேல் இந்தமாதிரி செய்யாதே…”
        சரி. மம்மி.


கல்லூரியில் மரத்தடி.
புதுக்காரோடு வந்திருக்கும் மோகனாவைச்சுற்றி தோழிகள் கூடியிருக்கின்றனர்.
        சொன்னமாதிரியே மோகனா புதுக்காரோடு வந்துட்டாளே! ப்ரியா இனிமேல் பந்தா காட்ட முடியாது.
        ஆமாடிஏதோ அவ மட்டுந்தான் கார் வச்சிருக்க மாதிரி என்ன அலட்டு அலட்டுனாகார் எல்லார் வீட்டிலேயுந்தான் இருக்கு. என்ன…! எல்லாம் பழைய மாடல். இவ லேட்டஸ்ட் புதுகார் வைச்சிருக்கான்னு அலட்டுனாஇப்ப என்ன பண்ணுவா…? மோகனா அவளைவிட இன்னும் லேட்டஸ்ட் காரா வாங்கிட்டாளே…!”
        மோகனா, நீதாண்டி ப்ரியாவிற்கு எல்லாவிதத்திலேயும் சரி சமமா நிக்கக்கூடியவ…”
        அவளுக்கு நான் ஒருபடிமேலன்னு எல்லாரும் சொல்லணும். அதுக்கு உங்க சப்போர்ட் வேணும். உங்க எல்லோருக்கும் ட்ரிட் தாறேன். All of you, please get in the car…


மோகனாவிடம் மருதம்மா புலம்பிக் கொண்டிருக்கிறாள்.
        முதல் நாள் உங்கப்பாகிட்டே நீ எங்கன்னு கேட்டு சண்டை போட்டேன். பிறகு சுந்தரத்துகிட்ட சண்டை போட்டேன். இரண்டுபெரும் வாயை திறக்கவே இல்லை. சரி ராத்திரி வந்துருவேன்னு காத்திருந்தேன். நீ வரலை என்னோடு ராத்திரி தூக்கம் போச்சு.
        இரண்டாவது நாள், ……….”
        அம்மா, இந்த கதையெல்லாம் எனக்கு எதுக்கும்மா? எனக்கு நிறைய வேலை இருக்கு…” நகர்கிறாள்.
        நான் பட்ட கஷ்டத்தை, வேற யாருகிட்டடி சொல்வேன்…” அழுகிறாள்.
       

        மோகனா டி.வி பார்த்துக்கொண்டிருக்கிறாள். டி.வியில் திரைப்படம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு காட்சியை பார்த்துவிட்டு அவள் விழுந்து, விழுந்து சிரிக்கிறாள். பிறகு யோசித்தவளாக, செல்லை எடுத்து இரவு 9:00 மணிக்கு ஒரு ரிமைண்டர் வைக்கிறாள்.
        அன்றிரவு அவள் செய்யும் சிறுவிளையாட்டு வினையாகிறது.
இரவு 9:00 மணி
        ரிமைண்டரை பார்த்த பிறகு, மோகனா தனக்குதானே சிரித்துக்கொள்கிறாள்.
        தொடர்ந்து அவளது குறும்பும், திரையில் ராசாத்தியின் அறிமுகமும் காட்சியாக விரிகிறது.


        இரண்டு முக்கிய காட்சிகளுக்குப் பிறகு மருதம்மா கையில் கட்டுடன் இருக்கிறார்.
        தயவு செய்து உண்மையை சொல்லும்மாமுந்தாநாள் ராத்திரி என்னதான் நடந்துச்சு?
        அவ அவவந்தாஎன்ன கொல்ல வந்திருக்காஎனக்கு பயமாயிருக்குஎன்னை விட்டுட்டு எங்கேயும் போகாதே…”
        யாரும்மாஅவ. உன்னை எதுக்கு கொல்ல வரணும்? வேணும்னா, போலீசுல கம்ப்ளைன்ட் பண்ணிரலாம்.
        மருதம்மா சிரிக்கிறாள்.
        ஏம்மா சிரிக்கிறே…?”
        அவ அல்ப ஆயுசுல செத்துப்போன சின்னப்பொண்ணுடிஆவியா அலையுறபோலீஸ் என்னைப்போல பாவிகளை பிடிக்கும். ஆவியை எப்படி பிடிக்கும்?”
        அந்த சின்னப்பொண்ணுக்கு நீ ஏதாவது கெடுதல் செஞ்சி, அதனால அவ இறந்துட்டாளா…”
        இல்லைடி. இல்லை. நீ வேற ஏதும் கேட்காதேமொதல்ல நீ வெளியே போஎன்னைக் கொஞ்சம் தனியா விடு.


        சுந்தரம் மோகனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறான்.
        சின்னம்மா, அம்மா நீங்க டூர் போன பத்து நாளா தனிமையில ரொம்ப பயந்துட்டாங்க போலரொம்ப கோபப்பட்டாங்கரொம்ப எரிச்சல்பட்டாங்கரொம்பவே கஷ்டப்படுத்திட்டாங்கநீங்க டூர் போய் ஏழு, எட்டு நாளிருக்கும்…, சாயந்திரம் தோட்டத்துல உட்கார்ந்து புலம்பிக்கிட்டே இருந்தாங்கபக்கத்து வீட்டு சின்னப்பசங்க இரண்டு பேர், தெருவில் கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. பந்து, நம்ம தோட்டத்துல விழுந்து, அம்மாகிட்ட வந்துச்சுஅந்தப்பசங்க பந்து எடுக்க உள்ளே வர, அம்மா என்ன நினைச்சாங்களோகத்தி, கூப்பாடு போட்டு, கல்லை எடுத்து எறிய ஆரம்பிச்சுட்டாங்கஅதுல ஒரு சின்னப்பையனுக்கு லேசா காயம். ஐயா அப்புறம் பக்கத்து விட்டுக்கு போய் மன்னிப்பு கேட்டுட்டு வந்தார். இதெல்லாம் உங்ககிட்ட சொல்ல வேணாம்னு ஐயா சொன்னாருஅதனாலதான் சொல்லலை. அம்மாவை நல்ல டாகடர்கிட்ட கூட்டிட்டு போய் காட்டுங்கம்மா…”


        நான் டூர் போன இந்த 10 நாளும் என்னம்மா நடந்துச்சு...?”
        திடீர்னு என் மேல அக்கறை வந்து, இப்பவாச்சும் என் பேச்சுக்கு காது குடுக்கிறீயே
        முதல்நாள் காலையில் உனக்கு காபி கொடுக்கலாம்னு உன் ரூமுக்கு வந்தேன். உன்னைக்காணோம். அப்புறம் உங்க அப்பாகிட்டே கேட்டேன். அவரும் எனக்குத் தெரியாதுன்னுட்டார். அப்புறம் சுந்தரத்துக்கிட்ட போய் கேட்டேன். அவரும் தெரியாதுன்னுட்டார். உன் செல்லுக்கு போன் செஞ்சு பார்த்தேன். ஸ்விச்சுடு ஃஆப்ன்னு வந்துச்சு. உன் பிரண்டு வீட்டுக்கு போய் கேட்கலாம்னு நினைச்சேன். அப்புறம் நீ எங்க திட்டுவீயோன்னு பயந்து, போகலை. எப்படியும் இராத்திரி நீ வந்துடுவேன்னு அமைதியாய் இருந்தேன். நீ வரலை. அப்புறம்தான் தொஞ்சுச்சுநீங்க எல்லோரும் பேசி வைச்சு, எங்கிட்ட விளையாடுறீங்கன்னுநான் விடிய, விடிய துங்கலை. டி.வி பார்த்துகிட்டே இருந்தேன்.
        இரண்டாவது நாள், உன் செல்லுக்கு ட்ரை பண்ணி பார்த்தேன். அப்பவும் ஸ்விச்சுடு ஃஆப்ன்னு வந்துச்சு. நீ டூர் போயிருக்கிற விசயத்தை, பிறகு உங்க காலேஜில போய் விசாரிச்சு தொஞ்சிக்கிட்டேன். அப்புறம்தான் நிம்மதி ஆச்சு. அதுவரை மெண்டல் டார்ச்சலா இருந்துச்சு.
        வீட்டுக்கு வந்தேன். யார்கூடவும் பேசலை. உன் செல்லுக்கு ட்ரை பண்ணினேன். அப்பவும் ஸ்விச்சுடு ஃஆப்ன்னு வந்துச்சு.
        மூணாவது நாளும், ஸ்விச்சுடு ஃஆப்ன்னு வந்த பிறகுதான், நீ செல்நம்பரை மாத்திருப்பேன்னு புரிஞ்சுக்கிட்டேன். சுந்தரத்துக்கிட்டே உன் புதுநம்பர் என்னன்னு திரும்பத்திரும்ப கேட்டுக்கிட்டே இருந்தேன். பாவி சொல்லமாட்டேன்னுட்டான்.
        பிறகு வீட்டுல நான் தனியா இருக்கவேண்டியிருந்தது. மொதல்ல போரடிச்சது. பிறகு கொஞ்சம், கொஞ்சமா பயம் வந்துச்சுஉங்கப்பாவும், சுந்தரமும் இராத்திரி 9 மணிக்குத்தான் வருவாங்கஅதுவரை தனியா டி.வி பார்த்துக்கிட்டு இருப்பேன். நீ இருந்தாலாவது ஷாப்பிங், சினிமா, கோயிலுன்னு கூட்டிட்டு போவஇவ்வளவுதாண்டி நடந்தது.
        முக்கியமான விசயத்தை மறைக்கிறீயேநீ ஏதோ சின்னப்பசங்க மேல கல்லெடுத்த அடிச்சியாமே…”
        யார் சொன்னா…?”
        யார் சொன்னால் என்ன? கல்லெடுத்து அடிச்சியா? இல்லையா…?”
        ஆமாம். அது வந்துரொம்ப போரடிச்சதுன்னு, அன்னைக்கு உங்கப்பா வைச்சிருந்த டிரிங்க்ஸ் எடுத்து சாப்பிட்டேன். அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு சரியா நினைவில்லை.
        நீ வேறெதையும் மறைக்கலியே…”
        இல்லைடி…”
        “…………”
        ம்அக்கறையா கேட்கறேன்னு நினைச்சா, துப்பறிய கேட்கிறேஇல்லை…”
        அது சரி. டிரிங்க்ஸ் சாப்பிட மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணினது ஞாபகம் இருக்கா…?”
             எல்லாத்துக்கும் நீங்க செஞ்ச டார்ச்சல்தான் காரணம். ரொம்ப நாளைக்கு பிறகு அந்த கருமத்தை சாப்பிட வேண்டியதா போச்சு.


        ராமையாவின் வீட்டிற்கு பழைய வேலைக்காரி சரோஜா வருகிறாள். அவளே சமையல் உட்பட அனைத்து வேலைகளும் செய்பவள்.
சரோஜா மருதம்மாளிடம் பேசிக்கொண்டிருக்கிறாள்.
        அம்மா, சுந்தரம் திரும்ப வந்து வேலை பார்க்கச்சொல்லிட்டார்…”
        ரொம்ப சந்தோஷம். இந்த வீட்டுல அந்தாள் வச்சதுதான் சட்டமின்னு ஆயிப்போச்சு. நடக்கட்டும். ஆமாம் உன் மகளுக்கு குழந்தை பிறந்துடுச்சா…?”
        குழந்தை பிறந்து ஒரு மாசம் ஆயிடுச்சும்மா. ஆண் குழந்தை.
        சா. வர்ற சண்டே உன் மகளையும், பேரனையும் கூட்டிட்டு வா…”
        சரிங்கம்மா. நான் இல்லாதது, உங்களுக்குதான் ரொம்ப சிரமம். இல்லையாம்மா…?”
        அதை ஏன் கேட்கிறே…? இந்த ஒன்றரை மாசம் நான் பட்ட பாடு…”
        அம்மா, என்ன சமைக்கட்டும்?”
        மொதல்ல வீட்டை சுத்தம் பண்ணுசமையலை அப்புறம் பார்க்கலாம்.


ஞாயிற்றுக்கிழமை.
        அம்மா, பாப்பாவை நான் தூக்கி பார்க்கிறேன். ஆசையா இருக்கும்மா…”
        வேலைக்கார பெண்ணின் பேரனை, மோகனா ஆர்வமுடன் பார்க்கிறாள்.
        மோகனா. அவசரப்படாதேபிறந்த குழந்தையை தூக்கணும்னா, உடம்பை புடுச்சு தூக்கக்கூடாது. தலை தொங்கிரும். தலை நிக்க, நாலஞ்சு மாசம் ஆகும். தலையையும், உடம்பையும் ஒருசேர இரண்டு கையாலேயும் தூக்கணும். தெரியுதா…?”
        சரிம்மா…”
அவள் சொன்னபடி குழந்தையை தூக்கி மகிழ்கிறாள், மோகனா.


கல்லூரியில் மரத்தடியில் மோகனாவும், தோழி கனகாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
மோகனா: கனகா, வர்ற சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வாறியா?”
        என்னடி அதிசயமா இருக்கு. எப்பவுமே யாரையுமே வீட்டுக்கு கூப்பிடமாட்டீயே…!”
        இந்த டூர் நம்மளை ரொம்ப க்ளோஸ் ஆக்கிடுச்சு, இல்லை...? இனிமேல் நமக்குள்ளே எந்த ஒளிவுமறைவும் தேவையில்லையின்னு தோணுச்சுஅதுதான் உன்னை வீட்டுக்கே கூப்பிட்டேன்.
        சரிடிநானும் உங்கிட்டே எல்லா விசயங்களையும் ஷேர் பண்ணிக்கிறேன். கட்டாயம் உங்க வீட்டுக்கு வர்றேன்.
        இதென்னடிஜாவா புக். ஜாவா படிக்கிறியா…?”
        இல்லைடி. பஸ்ல கூட்டம் அதிகமா இருந்துச்சு. படியில தொத்திக்கிட்டு வந்த பையன் ஒருத்தன், வைச்சிருக்க சொல்லி அவனோட புக்ஸ் எல்லாம் கொடுத்தான். பஸ்ச மிஸ் பண்ணிட்டான் போலதிரும்ப வரவே இல்லை. நாளைக்காலையில வாங்கிக்கிடுவான்னு நினைக்கிறேன்.
        பார்த்துடிஅலைச்சல் கேசா இருக்கப்போகுது.
அங்கு வரும் இன்னொரு மாணவி சொல்கிறாள்.
         கனகா, உன்னை லீலா மேடம் கூப்பிடறாங்க…”
        இதோ வந்துடுறேன்மோகனா.
        மோகனா அந்த புத்தகங்களை புரட்டிப்பார்க்கிறாள். ஒரு புத்தகத்தில், ஒரு கவரில் ஒரு இளைஞனின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இருக்கின்றன. கவரிலும், புத்தகங்களிலும் மனோகர் என்று எழுதப்பட்டிருப்பதை கவனிக்கிறாள்.
        அந்த இளைஞனின் அழகு அவளை கவர்ந்துவிடவே, ஒரு புகைப்படத்தை எடுத்து தனது புத்தகத்தில் ஒளித்து வைத்துக் கொள்கிறாள்.
        கனகா திரும்பி வருகிறாள். முகம் வாடியிருக்கிறது.
        என்னடி? என்ன பிரச்சினை?”
        பணம்தான் பிரச்சினை. ஸ்காலர்சிப் கிடைச்சதாலதான் இந்த காலேஜில் சோந்தேன். எல்லா செலவுக்குமா ஸ்காலர்சிப் தர்றான்?”
        பணத்தை பத்தி கவலைப்படாதேஎவ்வளவு வேணுமோ எங்கிட்ட கேளு தாறேன்.
        தாங்க்ஸ்டி…”
        சரி, டூர்ல மறக்கமுடியாத சம்பவமின்னு, எதைச் சொல்லுவே?”
        வேறென்ன தாஜ்மஹால் பார்த்ததுதான்உனக்கு?”
        தாஜ்மகால் நான் ஏற்கனவே பார்த்திருக்கேன்டிஎன்னை பொறுத்தவரை டில்லியில் ஒரு அனாதை ஆசிரமத்தில், அங்குள்ள பசங்களுக்கு சாப்பாடு பாமாறியதுதான்டி மறக்க முடியாத சம்பவம். நாம கொடுத்த டொனேஷனில், என் பங்குதான் அதிகமின்னு மேடம் சொன்னப்ப, எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா…? joy of giving  என்னன்னு அப்பதாண்டி புரிஞ்சுது.
        கல்லூரியில் மணியடிக்க இருவரும் எழுந்து போகின்றனர்.


அன்றிரவு மோகனாவின் பெட்ரூம்.
        கையில் அந்த இளைஞனின் புகைப்படத்துடன் கட்டிலில் படுத்திருக்கிறாள்.
        யாருடா நீ. ஏன்டா இவ்வளவு அழகா பிறந்து தொலைச்சேஉன்னையும், என்னையும் அந்த விதி சேர்த்து வைக்குமாடாடேய் மனோ! நீ ஏழையா இருந்தாலும் பரவாயில்லை. நான் உன்னை ஏத்துக்கிறேன்டாநீ எங்கடா இருக்கேஏன்டா, என்னை இப்படி பாடாய் படுத்துறே
        உனக்கு அரும்பு மீசைகூட இல்லையேஷேவ் பண்ணிட்டியோஆம்பளைங்களுக்கு மீசைதாண்டா அழகு.
        நான் உன்னை முதல்முதலா பார்க்கும்போது நீ மீசையோட இருக்கணும்சரியா.
புகைப்படத்திற்கு முத்தம் கொடுக்கிறாள்.


மறுநாள்.
        என்னடி அந்த பையன்கிட்ட புக்சை திருப்பிக்கொடுத்திட்டீயா…?”
        இன்னிக்கு காலையில பஸ்ல வந்து வாங்கிக்கிட்டான்டி. நேத்து அவன் காலேஜிக்கே போகலையாம். புக்ஸ் சுமக்கவைச்சதற்கு என்கிட்ட ஸாரி கேட்டாண்டி…”
        பையன் எப்படி?”
        cute and gentle எதுக்கு கேட்கிறே…?”
        சும்மாதாண்டி கேட்டேன்.
        உங்கிட்ட ஏதோ ஒரு விசயம் சொல்லணும்னு நினைச்சேனே...!
        என்னடி…?”
        டில்லி அனாதை ஆசிரமம் மேட்டா, அந்த ப்ரியாவோட ஐடியாதானாம். மேடம் சொன்னாங்க.
மோகனாவின் முகம் சிறுக்கிறது.
        கனகா, கொஞ்சம் யோசிச்சுப் பாரு. ஏழைங்களுக்கு உதவணும்னா எங்க வேணா, எப்ப வேணா உதவலாமே! இங்க அனாதை ஆசிரமமே இல்லையா…? டூர் போன கோல்டன் ஹவர்ஸ்தானா கிடைச்சது. அந்த நேரத்தில் முக்கியமான வேற இடங்களை சுத்திப்பார்த்திருக்கலாமில்ல…”
        நீ சொல்றதும் சரிதான்.
        ஆமாம். யாருடி அந்த ப்ரியா? எல்லோரும் ஓவரா துக்கிவைச்சு கொண்டாடுறாங்கஆரம்பத்திலேயிருந்து ரொம்ப நல்லவ மாதிரியே சீன் போடுறா…”
        எனக்கும் அவளை ஆரம்பத்திலேயிருந்து பிடிக்காதுடிபெரிய கைகாரி.”
        ஃபாஸ்ட் ரேங்க் வாங்கறோமின்ற திமிர். அதுதான் ஆடுறாஏய். எனக்கு நீ ஒரு உதவி செய்வியா?”
        என்னடி செய்யணும்…?”
        நல்ல படி. இந்த வருஷம் உன் பர்சண்டேஜ் அதிகமாகணும். நீதான் கோர்ஸ் டாப்பரா வரணும். என்னால அவகூட படிப்புல போட்டி போட முடியாது. நீதான் அவளுக்கு அடுத்து நல்லா படிப்பியேஉன்னாலதான் முடியும்.
        சரிடி. உனக்காக இன்னும் நல்லா படிக்கிறேன்.



சண்டை பயிற்சியாளரின் கவனத்திற்கு :

கார் மோதி, பெண்ணொருத்தி, துக்கி எறியப்படுகிறாள்.
ஒரு கார் மரத்தில் மோதி விபத்திற்குள்ளாகிறது.
ஒரு பெண் முதல் மாடியிலிருந்து, கீழே விழுகிறாள்.

கவிஞரின் கவனத்திற்கு :

பாடல் 1:
        வடஇந்தியாவில் சுற்றுலா தலங்களில் ஒரு பாடல்காட்சி.
பாடல் இளமையைப் பற்றியதாக, நட்பைப் பற்றியததாக, சுற்றுலாத் தலங்களின் அழகைப் பற்றியதாக இருக்கிறது.
        இருபத்து ஐந்து பெண்கள் மொத்தமாக ஆடுகின்றனர். அதன் தலைவியாக, ப்ரியா ஆடுகிறாள்.
        பிறகு அவர்கள் ஐந்து குழுக்களாக ஆடுகின்றனர்.
        அதில் ஒரு குழுவின் தலைவியாக ஆடும் பெணணின் மீது கேமராவின் கவனம் அதிகமாக இருக்கிறது. அவள் மோகனா.

பாடல் 2:
இசையமைப்பாளர், மற்றும் நடன இயக்குனர் கவனத்திற்கு
        பெண்கள் கல்லுரியில் நடக்கும் நாட்டிய நாடகம் அது. நாடகத்தில் வசனம் ஏதும் இல்லை. இசை மட்டுமேஆண் உடையில் இரு பெண்கள், மற்றொரு பெண் என மூன்றே கதாபாத்திரங்கள்.
        இரண்டு இளைஞர்கள், ஒரு பெண்ணை கற்பழித்துக் கொன்றுவிட, அவள் ஆவியாக வந்து இருவரையும் கொடூரமாகக் கொன்று பழி தீர்க்கிறாள். இது கதை.

பாடல் 3:
        மோகனா மனோகர் என்ற இளைஞனின் புகைப்படத்தை மட்டும் பார்த்து காதல் கொள்கிறாள்.
அவளுக்கு பக்குவப்படாத மனம். அழகு மட்டுமே அவளுக்கு பிரதானமாக தொகிறது. அவள் காதல் மயக்கத்தில், ஏக்கத்தில் பாடும் கற்பனை பாடல் இது.

பாடல் 4:
        மோகனா மனோகரிடம் தன் காதலைச் சொல்ல, அவனும், அவள் மேல் கொண்டுள்ள காதலைச் சொல்ல, ஒரு கற்பனை பாடல் பிறக்கிறது.
அதில் இடம் பெறும் கற்பனைக் காட்சிகள்:
        இருவரும் காதலர்களாக ஊர் சுற்றுகின்றனர்.
        பிறகு சிறப்பான முறையில் அனைவரும் வாழ்த்த திருமணம் முடிக்கின்றனர்.
        மலைப்பிரதேசம் ஒன்றில் முதலிரவு கொண்டாடுகின்றனர்.
        அவன் வேலைக்கு செல்கிறான்.
        அவள் மாசமாக இருக்கிறாள்.
        அவன் குழந்தை பொம்மை வாங்கி வருகிறான்.
        அவள் அந்த பொம்மையை வைத்து, பிறந்த குழந்தையை தூக்கும் முறையை அவனிடம் விளக்கி காண்பிக்கிறாள்.
        அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
        அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

பாடல் 5:
        முதல் சரணத்தில், ஏழு வயது ஏழைச்சிறுமி தன் வாழ்வின் சந்தோஷங்களை பட்டியலிடுகிறாள். (அவள் தாயம் விளையாடுவாள். நொண்டி விளையாடுவாள். பட்டம் விடுவாள். தன் தோழன் பம்பரம் விடுவதை ரசிப்பாள். தானும் அதை கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டிருப்பாள். தோழனோடு கிரிக்கெட் விளையாடுவாள். அப்பா, அம்மாவுடன் திரைப்படத்திற்கு செல்வாள். லட்டு அவளுக்கு பிடித்த பலகாரம். தீபாவளி புதுத்துணி, மத்தாப்பு அவளால் மறக்கமுடியாதவை.)
        இரண்டாவது சரணம் அவளது எதிர்கால கனவை விளக்குகிறது. அவள் நன்றாக படிப்பாள். அவளது வீட்டின் பக்கத்து வீட்டில் மருத்துவம் படிக்கும் இளம்பெண் ஒருத்தி இருக்கிறாள். அவளை பார்த்தவுடன் இவளுக்கும் டாக்டராக வேண்டும் என்பது விருப்பம்.
        நான் டாக்டராக ஆகி, காய்ச்சல் வந்தவங்களுக்கெல்லாம் ஊசி போடுவேன். யாராவது எங்கிட்ட வம்பு பண்ணினாலும் ஊசி போடுவேன்.” - இது அவள் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.

கிளைமாக்ஸ் : மகள் மோகனா இறந்த ஏழாவது நாளில், இரவில், பங்களாவில் தனித்துவிடப்படும் மருதம்மாளிற்கு அடுக்கக்கடுக்காய் பல உண்மைகள் தெரியவர, அவள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகிறாள். (25 நிமிடக்காட்சிகளுக்குப் பிறகு) அவள் பதட்டத்தில் பங்களாவின் மாடியிலிருந்து கீழே விழுகிறாள்.


ராசாத்தி - சுபம் பகுதி:
    டாக்டா: “அம்மா, உங்க உடம்பு கூடிய சீக்கிரம் குணமாயிரும். எல்லாம் சரியாயிரும். சரி. சில உண்மைகளை சொல்லவேண்டிய நேரம் வந்திருச்சின்னு நினைக்கிறேன். மனசை திடப்படுத்திக்கோங்கமாராடைப்புன்னு ஆஸ்பிடலுக்கு அவசரமா காரில் போன உங்க கணவர் வழியிலேயே இறந்துட்டார். அதனால பதட்டமான உங்க வேலைக்காரர் சுந்தரம், காரை தெரியாமல் மரத்திலே மோதி விபத்துக்குள்ளாகிவிட்டார்.  பத்து நாளா கோமாவிலேயே இருந்த அவர், நினைவு திரும்பாமலே இறந்துட்டார்.”
        டாக்டா, என்ன சொல்றீங்க? நிஜமாத்தான் சொல்றீங்களா…?”
        ப்ரியா மருதம்மாளை ஆறுதலாக அணைத்துக்கொள்கிறாள்.
        ஆமாம். இது உங்களுக்கு பெரிய இழப்புதான். என்ன செய்ய…?”
        இரண்டு பேருமே இறந்துட்டாங்களா…?”
        உங்க பொண்ணு வேற தற்கொலை பண்ணிக்கிட்டான்னு கேள்விப்பட்டேன். மூன்று இழப்புகளை கொடுத்த ஆண்டவன், உங்களுக்கு ஒரு புது உறவையும் கொடுத்திருக்கான்ப்ரியா, உங்களை ஒரு தாயைப்போல இத்தனை நாளா கவனிச்சிருக்காஅவளுக்கு நீங்க எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது.
        மருதம்மா ப்ரியாவை கண்ணீரோடு வணங்குகிறாள்.
        பிறகு ப்ரியா, மருதம்மாளை அவளது பங்களாவிற்குள் கூட்டிக்கொண்டு போகிறாள்.
        அங்கு பங்களா ரெடிமேட் துணி தைக்கும் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரியாக மாற்றப்பட்டிருக்கிறது.
        அம்மா, நம்ம மோகனா வாழ்க்கையை முடிச்சிக்கிட்ட இடமா இந்த பங்களாவை பார்த்தால் உங்களுக்கு சங்கடமாத்தான் இருக்கும். நூறு பெண்களுக்கு வேலை கொடுக்கிற இடமா, வாழ்க்கை கொடுக்கிற இடமா பார்த்தீங்கன்னா அந்த சங்கடம் தெரியாது. நீங்க இங்க தங்கணும்னா தங்கிக்கோங்க. இல்லை கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்கோங்கஅதுவும் இல்லையின்னா என்னோட எங்க வீட்டுக்கு வந்திருங்க…”
        நான் இங்கேயே இருக்கேன்ம்மாநீ எங்கூட இருக்கிறது பலமா இருக்கும்மாஎனக்கு அதுபோதும்.
        உங்க ரெடிமேட் ஷோருமை நாந்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். இனிமே இங்க தயாராகிற ரெடிமேட் ஆடைகளும் நம்ம கடைக்கு போகும். சந்தோஷந்தானே அம்மா…?”
        ரொம்ப சந்தோஷம்மா…”
சுபம்.

        மோகனா அந்த புகைப்பட இளைஞனை சந்தித்தது எப்படி?
        அவர்களுக்குள் காதல் மலர்ந்தது எப்படி?
        ராசாத்தி யார்? அவளது துர்மரணத்திற்கு காரணம் யார்?
        மருதம்மாளின் பயத்திற்கு காரணம் என்ன?
        மோகனாவின் தற்கொலைக்கு காரணம் யார்? அவளது குணமா…? ப்ரியாவா…? காதலனா…? ராசாத்தியா…?

Trailor :

சுந்தரம் : “அய்யா ராமையாவுக்கு ஏதாவது ஆச்சு…, அம்மா மருதம்மா உயிரோடு இருக்க முடியாது…”

ராசாத்தி :  செத்த உடனே மறஜென்மம் எடுக்கணும்னா, ஒரு
ஈனபிறப்பாத்தான் பிறக்கணும்…”

மருதம்மா :  ஒரு காருக்கு ஆசைப்பட்டு தாய்ப்பாசத்தையே ஏலம் விட்டுட்டேயடி…”

மருதம்மா: “இந்த வேலைக்காரப் பசங்களை வைக்கவேண்டிய
இடத்துலதான் வைக்கணும்

மருதம்மா: “அவ அல்ப ஆயுசுல செத்துப்போன
சின்னப்பொண்ணுடி ஆவியா அலையுறா...

மருதம்மா: “பிறந்த குழந்தையைத் துாக்கணுமின்னா,
உடம்பைப் பிடிச்சு துாக்கக்கூடாது. தலை தொங்கிரும்...
தலையையும், உடம்பையும் ஒருசேர இரண்டு
கையாலேயும் துாக்கணும்.

கேசவன் : “எனக்கு அநத பழைய பேட்டும் வேணும். அத நான் ரன்னர் பேட்டா வைச்சுக்குவேன்.

சுந்தரம் :  ஹரியானாவில் 94 வயசு பெரியவர், புள்ளை
பெத்திருக்காராம், அதுவும் ஆம்பளைப்புள்ள...

Note : This screenplay requires a 'Special Casting' as mentioned in the television advertisement "kanna laddu thinna aasaiyaa..." in which a film director is in a search of actors.


விரைவில்

No comments:

Post a Comment

Blogger Widgets