ads

Friday, April 4, 2014

விடுதலை - திரைக்கதை முயற்சி

விடுதலை - திரைக்கதை

(கடைசியில் சில பக்கத்தக் காணோம் )



7 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற மூர்த்தி, சிறையில் 2 வருடங்களை கழித்து விட்டான். இந்த 2 வருடங்கள் 2 யுகங்கள் போல் மிக மெதுவாக கடந்திருந்தன மூர்த்திக்கு.
சிறையிலுள்ள நுாலகத்தில் படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் கிடைத்தாலும், அவற்றை படிப்பதில் அவன் ஆர்வம் காட்டவில்லை. அவன் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தாலே தன்னையறியாமல் துாங்கத் துவங்கி விடுவான். புத்தகங்கள் மேல் உள்ள வெறுப்பு, அவனை பள்ளிப்படிப்பை பாதியிலேயே விடச்செய்திருந்தது.
புதிதாக வந்த சிறைக்காவலர் ஒருவர், அவனை கைதி என்று கருதாமல் மனிதனாக மதித்துப் பழக, அவனும் அவருடன் நட்பு பாராட்டுகிறான்.
அவன் சிறைக்கு வந்த புதிதில், சிறையில் அவன் தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் அவனிடம் கேட்கிறார்.
தன் உயிர் நண்பன் தன்னை சிறையில் வந்து பார்க்கவில்லை என்ற ஏக்கத்தில் தான் தற்கொலைக்கு முயன்றதாக அவன் தெரிவிக்கிறான். தன் நண்பன் தன் வாழ்வில், எவ்வளவு முக்கியமானவனாக இருந்தான் என்பதை, நடந்த சில சம்பவங்கள் மூலம் அவரிடம் பகிர்ந்து கொள்கிறான்.
மேலும், சிறையில் ஒவ்வொரு நாளையும் சிரமத்துடன் கழிப்பதாக அவன் அவரிடம் கூறி வருத்தப்படுகிறான். தனக்கு வழங்கப்பட்ட தண்டனை அதிகம் என்று அவன் அடிக்கடி புலம்புகிறான். அரசாங்கத்தை பழிக்கிறான்.
புத்தகங்களை படித்தால் பொழுதை நன்முறையில் கழிக்க முடியுமென்றும், அதன்மூலம் மன அமைதி கிடைக்குமென்றும் அந்த காவலர் அவனுக்கு அறிவுரை சொல்ல, அவன் வேறு வழியின்றி புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கிறான்.
முதலில் அவன் ஒரு பைண்டிங் செய்யப்பட்ட காமிக்ஸ் புத்தகத்தை படிக்கிறான். அது 15 நிமிடங்கள் கொண்ட அனிமேஷன் படமாக திரையில் விரிகிறது. அது கற்பனையான உருவங்களையும், கற்பனைக்கெட்டா காட்சிகளையும் உள்ளடக்கிய விஞ்ஞானக்கதை.
பிறகு இரண்டாவதாக அவன் சிறுநாவல் ஒன்றைப் படிக்கிறான். அது 30 நிமிடங்கள் கொண்ட துப்பறியும் படமாக திரையில் விரிகிறது. அது விஞ்ஞான வளர்ச்சியையும், மனித உணர்வுகளையும் சமமாக அலசுகிறது.
அதன்பிறகு மூன்றாவதாக அவன் நாவல் ஒன்றைப் படிக்கிறான். அது 45 நிமிடங்கள் கொண்ட குடும்பப்படமாக (family drama) திரையில் விரிகிறது. அது முழுக்க, முழுக்க மனித உணர்வுகளை மட்டும் விவரிக்கிற, விவாகரத்து வழக்கு சம்மந்தப்பட்ட கதை.
அந்த மூன்றாவது நாவலை, அவன் மெய்மறந்து ஆர்வமாக படித்துக் கொண்டிருக்கும் போது, அவனுக்கு ஒரு சிறு ஏமாற்றம் ஏற்படுகிறது. அந்த நாவலில் கடைசியில் சில பக்கங்களை காணவில்லை என்பதே அது.
அந்த நாவலின் முடிவை அறிந்து கொள்ள, அவன் பல விதங்களில் முயல்கிறான். அனைத்தும் தோல்வியில் முடிகிறது.
பிறகு அந்த நாவலின் ஆசிரியரே, சிறையில் நடைபெற இருக்கும் விழா ஒன்றிற்கு வருகை தரவிருப்பதாக, காவலர் மூலம் அறிந்து கொள்ளும் அவன் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான்.
கடும் முயற்சிக்குப்பின் அந்த நாவலாசிரியருடன் பேசக்கூடிய வாய்ப்பை பெறுகிறான்.
அவரிடம், அந்த நாவலின் முடிவு குறித்து அவன் ஆர்வமாகக் கேட்கிறான். நாவலின் முடிவை பிறகு சொல்வதாக அவர் உறுதியளிக்கிறார். அதற்கு முன்பாக, அவன் சிறைக்கு வந்த காரணத்தை கேட்கிறார். அவன் சிறிது நேர தயக்கத்திற்கு பின்பு, தான் 7 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற காரணத்தை சொல்கிறான். அது ஒரு ப்ளாஷ்பேக்காக விரிகிறது.


ஆடியன்ஸ் யோசிக்கிறார்கள்…
முதல்ல 15 நிமஷத்துக்கு ஒரு கதை சொன்னார்கள். பிறகு 30 நிமஷத்துக்கு ஒரு கதை சொன்னார்கள். அடுத்து 45 நிமிஷத்துக்கு ஒரு கதை சொன்னார்கள். இப்ப… ப்ளாஷ்பேக். ஒரு குற்றவாளியின் கதை... இது எத்தனை நிமிஷமோன்னு அவசரமாய் தங்கள் செல்போனை எடுத்து டைம் பார்க்கிறார்கள்.
ஆனால் ஆடியன்ஸ் எதிர்பாராவண்ணம் நான்கே நிமிஷங்களில் ஒரு வித்தியாசமான, எளிமையான ப்ளாஷ்பேக் (reverse mode, no dialogue). 
இது ஏதோ வித்தியாசமாக இருக்கவேண்டுமென்பதற்காக, இங்கு reverse mode பயன்படுத்தப்படவில்லை. இங்கு reverse mode காட்சிகளுக்கு கூடுதல் அழுத்தம் தரும் வகையில் அமைந்திருப்பதாலும், flashback - கிற்கு ஒரு finishing punch கொடுக்க முடியும் என்பதாலும் பயன்படுத்தப்படுகிறது.

அதைக்கேட்ட பிறகு நாவலாசிரியர் நாவலின் முடிவை அவனிடம் விளக்கமாகச் சொல்கிறார். மேலும் அவன் எதிர்பாரா விதமாக, கூடுதல் தகவல் ஒன்றையும் அவர் சொல்கிறார். அதைக் கேட்டதும், அவன் அதிர்ச்சியடைகிறான். அதன்பிறகு நிதானிக்கும் அவன், மனதளவில் தெளிவாகிறான். அதுவரையில் மனதிற்குள் புழுங்கிக்கொண்டிருந்த அவனுக்கு, அன்று முதல் மனப்புழுக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது.

குறிப்பு : 
15 நிமிட அனிமேசன் படமும், 30 நிமிட துப்பறியும் படமும், ஒரு உதாரணத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் இடத்தில் வேறு படைப்புகளை நிரப்பிக் கொள்ள முடியும்.
சில படைப்புகள், குறும்படம் என்ற வகையிலும் அடங்காது. முழுநீளத்திரைப்படம் என்ற வகையிலும் அடங்காது. ஒருவேளை, குறும்படம் என்ற அடையாளத்தோடு வெளியிட்டால், அது போதுமான கவனத்தை பெறாமல் போகலாம். அதனால் எதிர்பார்க்கும் லாபம், புகழ் கிடைக்காமல் போகலாம். ஆனால் அத்தகைய படைப்புகள், சிறப்பான உள்ளடக்கத்தைக் கொண்டு, தவிர்க்கமுடியாத படைப்புகளாக இருக்கலாம். அதுபோன்ற படைப்புகளை மேற்கண்ட படைப்பில் இணைத்து அல்லது இதுபோன்ற உத்திகளை பயன்படுத்தி, திரைப்படம் என்ற அடையாளத்தோடு, மக்களிடம் கொண்டு சென்றால், எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.

Casting :
கதையின் நாயகனுக்கு வயது ஏறக்குறைய 28 இருக்கலாம். திரைக்கதையின்படி நாயகன் இருவேறு தோற்றங்களில் வர வேண்டியதிருக்கும்.
1. இரண்டு வருட சிறைவாசம் காரணமாக உடல்மெலிந்து பரிதாபமான தோற்றம்.
2. மேற்கண்ட தோற்றத்திற்கு நேர்மாறாக, ப்ளாஷ்பேக்கில் சற்று பூசினாற்போல் பருமனான உடல்வாகுடைய தோற்றம்.
ஒல்லியான ஒருவர் குண்டாவது சுலபமா? குண்டாக இருப்பவர் ஒல்லியாவது சுலபமா?
குண்டாக இருப்பவர் ஒல்லியாவது, ஆரோக்கியமான விசயம் என்று நான் கருதுகிறேன்.


Note : Low budget movie (Excluding 15 min and 30 min stories.)

No comments:

Post a Comment

Blogger Widgets