ads

Monday, April 21, 2014

யூகம் - திரைக்கதை முயற்சி


யூகம் - திரைக்கதை முயற்சி



சென்னையின் பிரபலமான துப்பறியும் நிறுவனம் அது. அதன் நிறுவனர் இறக்கும் தறுவாயில் இருக்கிறார். தனக்குப் பிறகு, தான் கஷ்டப்பட்டு உருவாக்கி, நற்ப்பெயருடன் நடத்திவந்த நிறுவனத்தை, தன் மகன் நல்லபடியாக நடத்தவேண்டுமே என்ற கவலை அவருக்கு உண்டு.
 
பொறுப்பில்லாமல் பொழுதைபோக்கும் தன் மகனிடம் தனது விருப்பத்தை, உறுதியாக வலியுறுத்திவிட்டு அவர் இறந்துவிடுகிறார். அவரது மகன் கணபதி (வயது 28), அந்த துப்பறியும் நிறுவனத்திற்குத் தலைமை ஏற்கிறார்.

"அநியாயத்துக்கு துணை போனதே இல்லை... நடக்கவிருந்த எத்தனையோ விபரீதங்களை, எனது நிறுவனம் முன்கூட்டியே கண்டறிந்து, அவை நிகழாமல் தடுத்திருத்திருக்கிறது..." - தந்தை அடிக்கடி பெருமையாக சொல்லும் வார்த்தைகளை கணபதி ஒருமுறை நினைத்துக் கொள்கிறார்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரசியல்வாதியை ரகசியமாக கண்காணிக்கும் பொறுப்பு, அவரது முதல் ப்ராஜெக்ட்டாக அமைகிறது. கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற கடினமான வேலையில், அவர் அனுபவமின்மை காரணமாக சொதப்பிவிடுகிறார்.
 
தன்னை கண்காணிக்கும், துப்பறியும் நிறுவனத்தைப் பற்றி அறிந்து கொள்ளும், அந்த அரசியல்வாதி, கோபம் கொள்கிறார். அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத வகையில், பல வகையில் நெருக்கடி கொடுத்து, அந்த நிறுவனத்தை முடக்கிவிடுகிறார்.
 
இனி நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படும் கணபதி, பெரும்கவலையில் ஆழ்கிறார்.
 
மீண்டும் போராடி அந்த நிறுவனத்தை, வெற்றிகரமாக நடத்த வேண்டுமென்ற உத்வேகம் அவரிடம் இல்லை. ஏனென்றால் யாரோ ஒருவர் கொடுக்கும் பணத்திற்காக, மூன்றாம் நபர்களின், அந்தரங்கத்தில் ரகசியமாக மூக்கை நுழைக்கும் அந்த வேலை அவருக்கு ஆத்ம திருப்தியை தரவில்லை. அவர் தனது தந்தையாரின் விருப்பத்தின்பேரிலேயே, அந்த வேலையை ஏற்கும்படியாக ஆயிற்று.
 
வேறு என்ன தொழில் செய்யலாம் என்ற பலத்த யோசனையில் அவர் ஆழ்ந்து விடுகிறார். வாழ்வோட்டத்தில் ஒரு தேக்க நிலை ஏற்பட்ட நிலையில், அவர், தனது கடந்தகால நினைவுகளில் மூழ்கிவிடுகிறார். குறிப்பாக தனது வாழ்வின் கசப்பான சம்பவங்களை அசை போடுகிறார்.
 
சிறுவயதில் பரிச்சை சமயத்தில், காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு வருட பள்ளிப்படிப்பு வீணானது, ப்ளஸ் டூ படிக்கும் போது காலாண்டு விடுமுறையில் ஏற்பட்ட விபத்து, நண்பனின் தங்கையின் அகால மரணம், தன்னை காதலித்த பெண் சூழ்நிலை காரணமாக வேறு ஒருவரை திருமணம் செய்தது, தனது முதல் தொழில் முடங்கிப்போனது என அனைத்தும் அவரது நினைவுகளில் படமாக ஓடுகிறது
 
இந்நிலையில் திடீரென்று அவருக்கு ஒரு சிந்தனை பிறக்கிறது. இளம்வயதில், தனக்கு நேர்ந்த விபத்து (ஒரு வித்தியாசமான சம்பவம்), ஏன் ஒரு சதிச்செயலாக இருக்கக்கூடாது என்ற கோணத்தில் அவர் விளையாட்டாய் யோசிக்கிறார்
 
அவரது இந்த யூகத்தின் விளைவு... மூன்று நபர்கள் அவரது சந்தேக வளையத்திற்குள் வருகின்றனர்
 
அவரது விசாரணையின் முடிவு, அவருக்கு ஒரு எதிர்பாராத அதிர்ச்சியைத் தருகிறது. அது ஒரு சதிச்செயல்தான் என்று அவர் அறிந்துகொள்கிறார்.

அவர் குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டாலும், குற்றவாளியை தண்டிக்க அவர் விரும்பவி்ல்லை.

தனது இரண்டாவது ப்ராஜெக்ட்டில் (own project), வெற்றியடையும் அவர், துப்பறியும் தொழிலில் மீண்டும் ஈடுபாடு காட்டினாரா...? இல்லை வேறு தொழில் துவங்கினாரா...?

 
பெரும்பாலும் திரைக்கதைகள் மெதுவாக ஆரம்பித்து, பரபரவென்று பற்றிக்கொண்டு அதிரடியாய் முடியும்.
 
இந்த திரைக்கதையோ அதிரடியாய் ஆரம்பித்து, மெதுமெதுவாக வேகம் குறைந்து, அமைதியாய் முடியும்.

Action - இல் ஆரம்பித்து, Suspense/Thriller - க்கு மாறி, Humanity - ஐ வலியுறுத்தி முடிகிறது திரைக்கதை. 


Fwpg;G : xU Fwpg;gpl;l fhuzj;jpw;fhf> ,j;jpiuf;fijia jkpopy; jahhpj;jy;> Rthu];ak; juhJ.
 



No comments:

Post a Comment

Blogger Widgets