கனவு
உருவாவது எப்படி?
கனவு
உருவாவது எப்படி?
உணர்ச்சிகளை
உணர்ந்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று உடலுக்கு கட்டளை இடுவது
மூளையின் வேலைகளில் ஒன்றாகும்.
மூளையின்
கட்டளையின்படி உடல் செயல்படும் என்பதால் மூளை வேறு, உடல் வேறு என்பது தெளிவாகிறது.
நாம்
தூங்கும்போது, மூளையும் தூங்கும் (ஓய்வு எடுக்கும்).
சாதாரண தூக்கநிலை, ஆழ்ந்த தூக்கநிலை என்று மூளையின்
தூக்கத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
நாம்
தூங்கும்போது, ஒரு பக்கமாக நீண்ட நேரம் படுத்திருந்தால் அதனால் அழுத்தப்படும்
கையில், வலி உண்டாகலாம். அல்லது, நடு இரவில்
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் தோன்றலாம். அல்லது,
அதிகாலையில், நமது பரபரப்பான வாழ்க்கையை தொடரவேண்டிய
நேரம் வந்துவிட்டது என்பதை (உத்வேகம்) நம்
உடல் (கடிகாரம்) உணரலாம்.
இது போன்ற
நேரங்களில், உடல் மூளைக்கு கட்டளை இட முடியாது. உடலின் பிரச்சனைகளை மூளை தானாக உணர்ந்து கொண்டால்தான் உண்டு.
மூளை
சாதாரண தூக்கநிலையில் இருந்தால், தனது கட்டுப்பாட்டில் உள்ள உடலுக்கு
ஏதோ பிரச்சனை உள்ளது என்று விழித்து, இது போன்ற உணர்ச்சிகளை உணர்ந்து,
அதற்கேற்றபடி செயல்படும்.
மூளை
ஆழ்ந்த தூக்கநிலையில் இருந்தால், தனது கட்டுபாட்டில் உள்ள உடலுக்கு
ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்பது மட்டுமே தெரியும். அப்போது மூளை
உடனே விழிக்காது. (தொடர்புடைய உணர்ச்சி என்னவென்றும் மூளைக்குத்
தெரியாது.)
இப்போது
மூளை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து, சாதாரண தூக்க நிலைக்கு வந்து,
அதன் பிறகே விழிக்க வேண்டும். (அதாவது செயல்பட
வேண்டும்)
மூளை
ஆழ்ந்த தூக்க நிலையில், இருந்து சாதாரண தூக்கநிலைக்கு வர சிறிதுகாலம் தேவைப்படும்.
இந்த இடைப்பட்ட காலத்தில் உருவாவதுதான் கனவு.
நிற்க.
கோடிக்கணக்கான
உணர்ச்சிகளை பதிந்து கொள்வதும் மூளையின் வேலைகளில் ஒன்று.
மூளையில்
ஞாபகங்கள் பதியப்பட்டு இருக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இது எப்படி சாத்தியம்? உணர்ச்சிகள் வாயிலாகவே ஞாபகங்கள்
மூளையில் பதிந்திருக்கும். கடந்த கால நிகழ்வு ஒன்றினை ஞாபகத்திற்கு
கொண்டு வாருங்கள். அந்த நிகழ்விற்கு தொடர்புடைய செயல்கள்,
உணர்ச்சிகள் வாயிலாகவே பதியப்பட்டிருக்கும் என்பதை உணர்வீர்கள்.
தொடர்வோம்.
ஆழ்ந்த
தூக்கத்திலிருக்கும் மூளை, சிறிது நேரம், தன்னுள் பதித்திருக்கும்
கோடிக்கணக்கான உணர்ச்சிகளில், ஒரு சில உணர்ச்சிகளை சம்மந்தமில்லாமல்
தொடர்ச்சியாக எழுப்பிவிடும். இதையே நாம் கனவு என்கிறோம்.
மூளை
: உடலே... உன் உபாதைக்குரிய உணர்ச்சி, புதிதாக என்னவாக இருந்துவிடப்போகிறது...?
உன் உபாதை உணர்ச்சி இதுவா, இதுதானே அல்லது அதுவா...
- என்று தன்னுள் பதிந்திருக்கும் பல்வேறு உணர்ச்சிகளில் ஒருசிலவற்றை அலசும் மூளை,
கடமையைச் செய்யாமல், உடலிடம் போக்குக் காட்டி விளையாடுகிறது.
இதனையே கனவு என்கிறோம்.
ஒரு நிலையில், மூளை சாதாரண தூக்கநிலைக்கு வந்தவுடன், கனவு கலைந்து,
விழித்து, உடல் உபாதையை உணர்ச்சியாக உணர்ந்து,
அடுத்த என்ன செய்யவேண்டும் என்று உடலுக்கு கட்டளையிடும்.
ஆக, கனவு என்பது ஆழ்ந்த ஓய்வில் இருக்கும் மூளை, செயல்படவேண்டிய
நேரத்தில், சட்டென்று செயல்பட தயங்கி, தாமதித்து,
உடலை தற்காலிகமாக ஏமாற்றச் செய்யும் முயற்சி ஆகும்.
சுருக்கமாக
சொல்வதாக இருந்தால், மூளையின் சோம்பேறித்தனத்தின் விளைவே
கனவு ஆகும்.
கனவுகளுக்கு
எந்த பலன்களும் கிடையாது. கனவு ஆரோக்கியமான அறிகுறியும் அல்ல.
இது மருத்துவ
உலகின் ஆராய்ச்சி கட்டுரை அல்ல. என்னுடைய தனிப்பட்ட அனுபவக்கட்டுரையே
ஆகும்.
Have
a nice Dream…!
www.vpnilavu.blopgspot.in