கம்ப்யூட்டர்
உருவான வரலாறு
கி.பி.
1999 ஆண்டு, கம்ப்யூட்டர்
வாங்குவதற்கான பொருளாதார சூழலும், சந்தர்ப்பமும் வாய் த்திருந்தன.
ஆனால், பஜாஜ் M 80
வாங்க
வேண்டும் என்ற ஆசை,
டாப்
கியரில் கிளம்பி,
கம்ப்யூட்டர்
வாங்க வேண்டும் என்ற ஆசையின்மீது, பலமுறை ‘எட்டு’
போட்டதால் அந்த ஆசை இருந்த தடம் தெரியாமல்
மறைந்தது.
அதன்பிறகு பத்து
வருடங்களாக,
கம்ப்யூட்டர்
வாங்குவதற்கான பொருளாதார சூழலும், சந்தர்ப்பமும்
ஒன்று கூடிவரவில்லை.
கி.பி.
2010, மார்ச்
9
: நம்
வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தே ஆக வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்து, பணத்தை
எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
அப்போது என்னிடமிருந்த
முந்நூறு ருபாயில், ருபாய் 280-க்கு TVS
Champ கீபோர்டு வாங்கி வீடு
திரும்பினேன்.
கி.பி. 2010, மார்ச் 13 : Intel
Pentium Dual Core Processor 2.7 GHz (ருபாய் 3000) மற்றும் Mercury
ATX Cabinet Rigel (ருபாய் 1150) வாங்கினேன்.
கி.பி.
2010,
மே
25
: Intel DG41 RQ Motherboard (ருபாய் 2750) வாங்கினேன்
கி.பி. 2010, ஜுன் 7 : Acer
15.6 “ LED TFT Monitor (ருபாய் 4500) வாங்கினேன்.
கி.பி. 2010, ஜுன் 19 :
Transcend 1 GB DDR-II- RAM (ருபாய் 1300) வாங்கினேன்.
கி.பி.
2010, ஜுன்
20
: வாங்கி
வைத்திருந்த அனைத்து கம்ப்யூட்டர் பாகங்களையும்
Assemble செய்தேன்.
என்னிடமிருந்த பழைய
USB
Pendrive
-இல், முற்றிலும்
இலவசமாக கிடைக்கும் UPUNTU Operating System –த்தை Install செய்து தயாராக வைத்திருந்தேன்
Usb OS வாயிலாக, எனது
வீட்டில் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு வந்தது.
Hard disk, Dvd drive,
Speaker மற்றும் Headphone ஆகியவை இல்லாத கம்ப்யூட்டராக அது இருந்த்து.
கி.பி.
2010, ஜுன்
30
: Hard disk ( (ருபாய் 1650) மற்றும்
Mouse (ருபாய் 120) வாங்கினேன். Hard
Disk -இல் UPUNTU
Operating System Install செய்த பிறகு, கம்ப்யூட்டர்
முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது.
கி.பி.
2010, ஆகஸ்டு 9 :
Speaker (ருபாய் 300) மற்றும் Headphone
(ருபாய்
150)
வாங்கி
இணைத்தேன்.
கி.பி.
2010, டிசம்பர்
13
: Dvd drive (ருபாய் 1200) வாங்கி இணைத்தேன்.
குறிப்பு 1: “எனது
வீட்டில் கம்ப்யூட்டர் உருவான வரலாறு” - என்பதுதான்
தலைப்பு. நீளமாக இருக்கிறது என்பதால் சுருக்கிவிட்டேன். ஹி… ஹி…
குறிப்பு 2: அடிப்படையில்
நான் ஒரு Computer Engineer என்பதால் இப்படி ஒரு நிதானமான… நீண்டகால…
ஆக்கம்.
குறிப்பு 3: இலவச லேப்டாப்புகளை
பெறவிருக்கும்,
தமிழக
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் +1, மற்றும் +2 பயிலும் மாணவச் செல்வங்களுக்கு, அட்வான்ஸ்
வாழ்த்துக்கள்!