ads

Sunday, February 9, 2014

Inception இன்செப்ஷன் ஒரு பார்வை


இன்செப்ஷன் ஒரு பார்வை

இன்செப்ஷன் கதை என்ன?


கோமாவில் இருக்கும் ஹீரோவின் நினைவலைகளை நாம் திரைக்கதையாகப் பார்க்கிறோம்.
அவர் யார்? அவர் ஏன் கோமாவிற்கு செல்லும்படி ஆயிற்று…? போன்ற கேள்விகளுக்கு அவரது நினைவலைகளே பதிலளிக்கின்றன.
அவர் தனது சுயநலத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்.
அவரது கனவுலக ஆராய்ச்சியில் புதிதாக ஒரு விசயத்தை எதார்த்தமாக கண்டுபிடிக்கிறார். இது அவருக்கு எதிர்பாராத வெற்றி. ஆனால் அந்த ஆராய்ச்சியின் விளைவாக, எதிர்பாராமல், அவரது காதல் மனைவியை இழக்கிறார். மேலும் அவரும் சட்டசிக்கலில் மாட்டிக்கொள்கிறார். இது அவருக்கு இரட்டைத்தோல்வி.
வில்லன், ஹீரோவின் வெற்றிகரமான புதிய கனவுலக ஆராய்ச்சியை,  தனது பிசினஸ் போட்டியாளரை சூழ்ச்சியாக வெல்ல பயன்படுத்த நினைக்கிறான். சட்டசிக்கலில் இருந்து தப்பிக்க, ஹீரோவும் அதற்கு சுயநலமாக உதவ முன்வருகிறார்.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல, வில்லனின் பிசினஸ் போட்டியாளரை பொறுத்தவரையில், நம்பர் ஒன் பிசினஸ்மேன் என்ற வெற்றி, அவருடைய நோக்கமாகவோ, பெருமையாகவோ இல்லை. அவருடைய சிந்தனையே வேறு.
இது தன்னை வழி நடத்தும் அப்பாவிற்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். தன்னுடைய தனிப்பட்ட வாழ்விற்கு அல்ல. அவர்களின் குடும்ப பிசினஸ், தந்தை - மகன் பாச உறவின் சிறப்பை சிதைத்துவிட்டது. மேலும் அது தன்னுடைய இளம்பிராயத்தின் சுயத்தை இழக்கக் காரணமாகிவிட்டது. - என்பதே அவரின் சிந்தனை.
மகனின் சிந்தனையை தனது கடைசி காலத்தில் தாமதமாக புரிந்துகொண்ட அவரது அப்பா, தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காமலேயே உயிரிழக்கிறார்.
வில்லனின் கனவுலக சூழ்ச்சியானது, பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக,  பிசினஸ்மேன்,  தனது தகப்பனார், தன் மீது கொண்டிருந்த பாசத்தை உணர்வதற்கான சந்தர்ப்பத்தை அமைத்து தருகிறது.
இது பிசினஸ்மேனின் மனதை லேசாக்கி, அவர் மேலும் புத்துணர்வோடு வாழவும், வெற்றிகரமாக தொழில் நடத்தவும் வழி செய்கிறது.
கனவுலகில் ஒருவர் இறக்க நேரிட்டால், நிஜ வாழ்வில் அவருக்கு விழிப்பு வந்துவிடும். ஆனால் கனவுக்குள் கனவு என்ற பல அடுக்கு கனவுலகிற்குள் ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால், நிஜ உலகில் கோமா நிலையும், கனவுலகில், கனவுலக வாழ்க்கையே நிஜம் என்ற மாயையும் உண்டாகும்.
கனவுலக சூழ்ச்சியில், முதல் அடுக்கு கனவில் சுடப்படும் வில்லன், கனவின் அடுத்தடுத்த அடுக்குகளில், சதி திட்டத்தில் பங்கேற்று, இறுதியாக (மூன்றாவது அடுக்கில்) இறந்துவிடுகிறான். அதாவது, நிஜ உலகில் கோமா நிலையும், கனவுலகில், கனவுலக வாழ்க்கையே நிஜம் என்ற உறுதியான மனநிலையும் பெறுகிறான்.
கனவுலக சூழ்ச்சியில், நான்கடுக்கு கனவுகளில் பயணிக்கும் ஹீரோ, வில்லனின் கனவுலகிற்குள் சென்று, அவன் வாழும் வாழ்க்கை மாயை என்பதை அவனுக்கு தெரியப்படுத்தி, அவனை நிஜ உலகிற்கு திரும்ப வேண்டுகிறான். அதனை நம்ப மறுக்கும் வில்லன், அவனை சுட்டுக் கொன்றுவிடுகிறான். அதாவது, ஹீரோ நிஜ உலகில் கோமா நிலையும், கனவுலகில், கனவுலக வாழ்க்கையே நிஜம் என்ற உறுதியான மனநிலையும் பெறுகிறான்.
மனைவியை இழந்தாலும், குழந்தைகளுடன் நிம்மதியாக வாழலாம் என்ற அவனது ஆசை நிறைவேறாமல் போகிறது.
ஆரம்பமும், முடிவும் இல்லாத புதிரான திரைக்கதைக்கு, நான் தரும் வடிவமே இது.
உங்களது பார்வையில் வேறு வடிவம் கிடைக்கலாம். முயன்று பாருங்கள்.

www.vpnilavu.blogspot.in


மனிதனின் மனநிலைகளை பிரதிபலிக்கும் இன்செப்ஷன் திரைப்படம்

மனிதர்களின் பல்வேறு மனநிலைகளை பிரதிபலிக்கும் விதமாக இன்செப்ஷன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனின், மனதின் வீக்னஸ், கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சி ஆகும். ஆனால் உணர்ச்சியின் இடத்தில் கனவை வைத்து, கற்பனைக்கதையோடு உருவாக்கப்பட்ட திரைப்படமே இன்சப்ஷன்.

கனவு, கனவுக்குள் கனவு, மூன்றடுக்கு கனவு என்று பலஅடுக்கு கனவுகளில் பயணிக்கும் போது, மனிதனின் புத்திசாலித்தனம் படிப்படியாக குறையும் என்றும், அப்போது மனிதனை ஏமாற்றுவது எளிது என்றும் இப்படத்தில் சொல்லப்படுகிறது.

Extraction : ஒருவரது மனதில் இருக்கும் ஐடியாவை, அவர் அறியாவண்ணம் திருடுவது.

Inception : ஒருவரது மனதில், ஒரு புது ஐடியாவை, அவர் அறியாவண்ணம் விதைப்பது. (விதைக்கப்பட்ட ஐடியாவை, அவர் தனது சொந்த ஐடியாவாக நினைத்து செயல்படும்விதமாக…)





ஆனால் நடைமுறை வாழ்க்கையில்,

புத்திசாலி மனிதனின் மனதிலிருக்கும் ஐடியாவை திருட முடியாது. மனதில்  அவர் விரும்பாத ஐடியாவை விதைக்கவும் முடியாது.

முட்டாள் மனிதனின் மனதிலிருக்கும் ஐடியாவை திருட முடியும். மனதில்  அவன் விரும்பாத ஐடியாவை விதைக்கவும் முடியும்.
முட்டாள் மனிதனை சாம, தான, பேத, தண்ட முறைகளை பயன்படுத்தி, அவனை உணர்ச்சிவசப்படச் செய்து, அவனை பெரும்குழப்பத்தில் ஆழ்த்தி, அவனது ஐடியாவை திருடவும், அவன் மனதில் புது ஐடியாவை விதைக்கவும் முடியும்.

பைத்தியக்கார மனிதனின் மனதில் சிறப்பான ஐடியா இருக்காது. அந்த ஐடியாவை திருடவேண்டிய அவசியமே இருக்காது.  (ஐடியாவை திருடவேண்டிய அவசியம் இருந்தால், அவனது பைத்தியத்தை குணமாக்க வேண்டும்.) அவன் மனதில் புதிதாக ஒரு ஐடியாவை விதைக்கவும் முடியாது.

நடைமுறை வாழ்க்கையில், மனிதர்களின் பல்வேறு மனநிலைகளை, மிக உண்ணிப்பாக கவனித்து, சென்ட்டிமென்ட், ஆக்சன், கிராபிக்ஸ், சோஷியல் மெஸ்சேஜ் ஆகியவற்றை சரியாகக் கலந்து, மிக அற்புதமான முறையில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷம் என்றால் மிகையாகாது.  

Highest grossing movies list – இல், 38  வது இடத்தை (மாற்றத்திற்கு உட்பட்டது) இத்திரைப்படம் பிடித்திருந்தாலும், மற்ற திரைப்படங்களில் இருந்து வேறுபட்டு, அழியாப்புகழ் கொண்ட திரைப்படமாக, காலம் காலமாக பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழ் படங்களில் இன்சப்ஷன் :

1. தில்லாலங்கடி என்ற திரைப்படத்தில், ஜெயம் ரவி, மனவளர்ச்சி இல்லாத சந்தானத்தை, தான் ஒரு டாக்டர் என்று நம்ப வைத்திருப்பார். ஒரு கட்டத்தில், சந்தானத்திற்கு தான் ஒரு டாக்டர் தானா என்ற சந்தேகம் எழும்.
சந்தானம் : “பேன்ட் லூசா இருக்கு. சட்டை டைட்டா இருக்கு. நான் ஒரு டாக்டர்தானா… ”
உடனே ரவி, அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று அடி அடியென்று அடித்தவுடன், சந்தானத்தின் சந்தேகம் மறைந்துவிடும்.
சந்தானம் : “நான் டாக்டர். நீ பேஷன்ட். வேற ஏதும் டவுட் இருக்கா…?”

2. சமர் என்றொரு திரைப்படத்தில், வில்லன்கள், ஹீரோ விஷாலின் உணர்ச்சிகளோடு விளையாடி, அவரது மனதில் பெரும்குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.

www.vpnilavu.blogspot.in

Blogger Widgets