முன்னுரை:
சில வருடங்களுக்கு முன்பு ஆனந்தவிகடன் வாரஇதழ், தனது 75 வருட பாரம்பரியத்தின் அடையாளமாக,
‘பவள விழா கொண்டாட்டம்’ என்ற தலைப்பில், போட்டிகள் பல
நடத்தி, பரிசுகளை அள்ளி, அள்ளி வழங்கியது.
சில போட்டிகளில் நானும் கலந்துகொண்டேன். ‘உயிர்ப்பு’ என்ற கவிதைக்கும்,
‘கவனம்’ என்ற கவிதைக்கும்
தலா 2000 ரூபாயும், ‘தாய்மை’ என்ற குட்டிக்கதைக்கு 3000 ரூபாயும்
பரிசாகக் கிடைத்தது.
மேலும் அவ்வப்போது
எனது நகைச்சுவைத் துணுக்குகளும் வெளிவந்தது
உண்டு.
விகடன் தந்த ஊக்கத்தால், கவிதைகளும், குட்டிக்கதைகளும் நிறைய எழுதினேன். ஆனால் அவை பிரசுரம் ஆகவில்லை. அவை பிரசுரம் ஆகவில்லையே என்ற வருத்தத்தையும் விகடனே போக்கியது.
ஆனந்தவிகடனில் வெளிவரும் வருங்கால தொழில்நுட்பம்
என்ற தொடர் கட்டுரையின் ஒரு பகுதி, பிளாக்கைப்பற்றி (BLOG)
விவரமாக அலசியது. அது என்னுள் ஆக்கத்தையும், ஊக்கத்தையும்
கொடுக்க, இந்த பிளாக்கை எழுதஆரம்பித்தேன்.
நான் MCA படித்திருந்தாலும்,
பிளாக்கைப் பற்றி அறிந்திருந்தாலும், இந்த பிளாக்கை எழுதத்துாண்டியது விகடனே.
விகடனுக்கு நன்றி.
இப்படிக்கு
சே. சதாசிவம்
srisadasivam@gmail.com