மோர்
‘மோர்’ என்றதுமே ஒரு சம்பவம் அடிக்கடி நினைவில் வந்துவிடுகிறது. ஒருமுறை மதுரை சிம்மக்கல் அருகே உள்ள ஒரு தியேட்டரில் ‘நெத்தி அடி’
படம் (டப்பிங் படமெல்லாம் இல்லைங்க… ஒரிஜினல் தமிழ்படந்தான்.
நடிகர் பாண்டியராஜன் அவர்கள் நடித்து, இசையமைத்து,
இயக்கியது.) பார்க்கச் சென்றேன். நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின்புறமிருந்து
பிரதான சாலையை கடக்க முற்பட்டேன். ‘டமால்’ என்றொரு சத்தம். ஏதோ பறப்பது போலிருந்தது. நல்லவேளையாக என் மீது மோதியது ஒரு
பைக். லேசான சிராய்ப்பு காயங்களுடன் தப்பித்தேன். அங்குள்ளவார்கள் சாலையில்
விழுந்துகிடந்த என்னைத் தூக்கி ஓரமாக அமரவைத்து ஆசுவாசப்படுத்தினர். மோர்
வாங்கிக்கொடுத்து குடிக்கச் செய்தனர்.
அவர்களுக்கு என்
நன்றிகள் பல.
எனவே
நின்றுகொண்டிருக்கும் வாகனத்தின் பின்புறமிருந்து சாலையைக் கடக்க வேண்டாம்.
குறிப்பாக குழந்தைகளுக்கு இதை சொல்லுங்கள்.
கடவுளே! No More மோர்.
கடவுளே! No More மோர்.
இப்படியாக நெத்தியடியிலிருந்து தப்பித்தேன்.
ஒளிந்திருக்கும் G.K கேள்வியை கண்டுகொண்டீர்களா…?