ads

Thursday, February 6, 2014

புனைப்பெயர் - சிறுகதை



புனைப்பெயர்

டேய், சரவணா, நீ எழுதிய சிறுகதை வாசல்’
வார இதழில் வந்திருககுடா.
மூச்சிரைக்க ஓடி வந்த உயிர் நண்பன் இளங்கோவிடம் இருந்து புத்தகத்தை வாங்கிப் பார்த்தான் சரவணன். கதை சின்னச்சின்ன மாற்றங்களுடனும், அழகான ஓவியத்துடனும் பிரசுரமாயிருந்தது.
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட வயதான பெற்றோரைப் பற்றிய கதை அது. மன்னிப்பின் மகத்துவத்தை விளக்கும், அதைப்படிக்கும் எந்தவொரு பெற்றோரும், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டாலும் கூட அவர்களை சபிக்கமாட்டார்கள் என்பது உறுதி.
ஆனால் அக்கதை மிகச்சிறிய எழுத்தில்  பிரசுரமாயிருந்ததுதான் ஒரே குறை. நிச்சயம் வயதானவர்கள் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுவர் என்பதால், சரவணன் வருத்தமும் கோபமும் கொண்டான்.
கீழே அதைவிட சிறிய எழுத்தில், எழுதியவர் பெயர் இருக்க, சரவணன் கடுங்கோபம் அடைந்தான்.
வேறு பெயரில் கதை இருப்பதை இளங்கோ அறிந்து கொண்டான்.
டேய், புனைப்பெயர் எல்லாம் வேண்டாம். உன்னோட சொந்த பெயரில் எழுதுடா என்று எத்தனை தடவை சொன்னேன். இப்படி ஏமாத்திட்டியேடா?” இளங்கோ அலறினான்.
பிறகு அவனே சமாதானமாய் பேசினான்.
 சரி. சிறுகதைக்குரிய சன்மானம் கிடைத்தவுடன் நிச்சயம் ட்ரீட் தரவேண்டும்.என்றான் மகிழ்ச்சியாக.
அதிர்ந்த சரவணன் நிதானித்து பேசினான்.
சரி. உனக்கு இல்லாத ட்ரீட்டா? இப்பவே தர்றேன்.
டேய், அசத்தறடா.என்று உற்சாகமானான்.
 இருவரும் கடைவீதிக்கு புறப்பட்டனர். தனது கதை களவாடப்பட்டதை சரவணன் அவனிடம் சொல்லவேயில்லை.

Blogger Widgets