ads

Thursday, February 6, 2014

தேனில் குழைத்த மருந்து - சிறுகதை


தேனில் குழைத்த மருந்து





ராசாத்தி தன்னுடைய ஒன்றரைவயது குழந்தையைத் துாக்கிக்கொண்டு அவசரமாய் குடும்ப வைத்தியரிடம் சென்றாள்.
நகரின் பிரபலமான மருத்துவத்தம்பதியின் வீடு அது. அங்குதான் ராசாத்தி நெடுங்காலமாய் சமையல் வேலை செய்கிறாள். அதனால் எஜமானியே அவளது குடும்ப வைத்தியர்.
அம்மா என் குழந்தைக்கு உடம்பு சரியில்லைம்மாகொஞ்சம் என்னன்னு பாருங்கம்மா
குழந்தையை பரிசோதனை செய்தார் டாக்டர் தேவகி.
ராசாத்தி, குழந்தை வழக்கமா என்ன சாப்பிடுவான்?”
பால், அப்புறம் தண்ணிரில் நனைச்ச பிஸ்கட்…
வேறென்ன சாப்பிடுவான்? கொஞ்சம் ஞாபகப்படுத்தி சொல்லு?”
அம்மா, பொதுவாக குழந்தைகளுக்கு இனிப்பு பிடிக்குமேன்னு இரண்டு, முணு நாளாக தேன் கொடுத்துட்டு வந்தே…” என்றவள் அவசரமாய் நாக்கை கடித்துக்கொண்டாள.
தேவகிக்கு சட்கிடன்று தன் வீட்டு தேன்பாட்டில் நினைவுக்கு வந்தது. விசயத்தை ஊகித்துக்கொண்டவளாக அவள் பேசினாள்.
தேன் கொடுத்தியா? அதை ஏன் மறைக்கிறே…? நம்ம வீட்டிலிருந்து, உன் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போன தேனா அது?”
வியர்வையில் குளித்தாள் ராசாத்தி.
“முன்னாடி வீட்டுக்கு அரிசி எடுத்துட்டுப்போனே… குடிகாரப்புருஷன், புள்ளைகுட்டிங்கன்னு கஷ்டப்படறயேன்னு, வெறும் எச்சரிக்கையோட, மன்னிச்சுவிட்டேன். ஆனால் நீ பெரிய பொருளா திருடனுத்தானே தெரியுது. சின்னப்பொருளா திருடுனா எப்படி தெரியுமுன்னு நினைச்சுட்ட போல…”
 சிறிதுநேரம் யோசனையில் ஆழ்ந்த ராசாத்தி, திடீரென்று வேசமாய் பேசினாள்.
நான் திருடியதைக் கண்டுபிடிக்க, தேனில் எதையோ கலந்து வைச்சிட்டீங்களா…? என்னை தண்டிக்காமல் அநியாயமா என் குழந்தையை தண்டிச்சிட்டீங்களே…  நீங்க நல்லா இருப்பீங்களா?”
அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டாதே ராசாத்தி… ரொம்ப சின்னக்குழந்தைகளுக்கு தேன் ஒத்துக்கொள்ளாது. சின்னக்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப குறைவு. தேனில் நோயை உண்டு பண்ணக்கூடிய கிருமிகள் உண்டு. அதனால கொடுக்கக்கூடாது.
தெளிந்தாள் ராசாத்தி.
தப்பை நீ பண்ணிட்டு என்னை குற்றவாளி கூண்டிலே நிற்கவைச்சிட்டியே…!? இனியும் நீ இங்க வேலை பார்க்கணுமான்னு யோசிக்கிறேன்.
அம்மா என்னை மன்னிச்சுருங்க… இனி நீங்க வருத்தப்படற மாதிரி, நான் எந்த தப்பும் பண்ணமாட்டேன். இது சத்தியம்.
உன்னை நம்பறேன். என்றாள் தேவகி.
தவறுக்கு மேல் தவறு செய்த தன்னை, தண்டிக்காமல், கசப்பான மருந்தை உட்கொள்ள, அதை தேனில் குழைத்து தருவதுபோல, கண்ணியமான வார்த்தைகளில், தன்னைத் திருத்திய எஜமானியை கண்ணீர்பெருக்கோடு பார்த்தாள் ராசாத்தி.
Blogger Widgets