ads

Thursday, February 6, 2014

தீம்பார்க் செல்லவிருக்கிறீர்களா…! சில ஆலோசனைகள்:

தீம்பார்க் செல்லவிருக்கிறீர்களா…! சில ஆலோசனைகள்:


குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என எவ்வளவு கும்பல் சேர்த்துச்செல்கிறீர்களோ, அவ்வளவு குதுாகலம் நிச்சயம். மொத்தமாக டிக்கெட் புக் செய்பவர்களுக்கு கட்டணச்சலுகை கிடைக்கக்கூட வாய்ப்பிருக்கலாம்.
கொடுத்த காசுக்கு எல்லா விளையாட்டுக்களையும் விளையாடியே தீருவேன் என்று உடல்நலனை கெடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் வயது, உடல்வாகு ஆகியவற்றை கருத்தில்கொண்டு, உங்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை மட்டும் விளையாடுங்கள்.
தீம்பார்க்கில், ஒரு நாளில் பகல் முழுவதும் செலவழிக்க வாய்ப்பு உணடு, எனவே காலையில் உள்ளே சென்றவுடன், நீாவிளையாட்டுக்களை விளையாட ஆரம்பித்துவிடவேண்டாம். முதலில் இராட்டினம் போன்ற பிற விளையாட்டுக்களை விளையாடுங்கள். பிறகு வெயில் உச்சத்திற்கு வந்தபிறகு, நீர்விளையாட்டுக்களை விளையாடுங்கள்.
நீர்விளையாட்டுக்கென பிரத்யேக ஆடைகளையும், தலைதுவட்ட துண்டுகளையும் மறவாமல் உடன் எடுத்துச் செல்லுங்கள். இல்லாவிட்டால் அவற்றை அங்கு விலைக்கோ, வாடகைக்கோ வாங்க நேரிடலாம்.
கண்ணாடி அணியும் வழக்கம் உள்ளவர்கள், கண்ணாடியை கழட்டி வைக்க, கண்ணாடிக் கூடை மறவாமல் எடுத்துச்செல்லுங்கள்.
குழந்தைகளை சுதந்திரமாக விளையாடவிட்டாலும், அவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் இருக்கட்டும்.
தீம்பார்க்கில், ஒரு நாளின் பகல் முழுவதும் செலவழிக்க வாய்ப்பு உண்டு. எனவே மறுநாள் உடல்சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அங்கு செல்பவர்களுக்கு, மறுநாள் விடுமுறை நாளாக இருத்தல் நலம்.
பொழுதுபோக்கு என்ற பெயரில், திரும்பத்திரும்பதிரைப்படங்களுக்கே செல்லாமல், அவ்வப்போது, குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது, இதுபோன்ற தீம்பார்க்குகளுக்கு குடும்பத்துடன் சென்றுவருவது, குடும்ப உறுப்பினர்களிடையே அன்னியோன்யத்தை வளர்ப்பதுடன், உடல்நலன் மற்றும் மனநலன் வளம்பெற வழிவகுக்கும்.

No comments:

Post a Comment

Blogger Widgets