ads

Thursday, February 6, 2014

ரேடியோ மிர்ச்சியுடன் ஒரு அனுபவம்



ரேடியோ மிர்ச்சியுடன் ஒரு அனுபவம்



ஒருமுறை ரேடியோ மிர்ச்சி'-யில் சின்னதாக ஒரு போட்டி வைத்தார்கள். அடிக்கடி போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கி நேயர்களை மகிழ்விப்பது அவர்கள் வழக்கம்.
 போட்டி இதுதான். அமீர்கான் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கபட்ட லகான்படத்தில் நடித்தார். ஷாருக்கான் பெண்கள் ஹாக்கியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சக்தே இந்தியாஎன்ற படத்தில் நடித்தார்.
அதே போல தமிழ் நடிகர்கள் ஸ்போர்ட்ஸைமையமாக வைத்து படமெடுத்தால் யார், யார் என்னென்ன விளையாட்டை மையமாக வைத்து எடுப்பார்கள் என்று நேயர்களின் கற்பனைத் திறனுக்கு சவால் விட்டனர்.
யார், யாரோ எதை, எதையோ சொல்ல, என் பங்கிற்கு நானும் கலந்துகொள்ளலாம் என ரேடியோ மிர்ச்சியை அலைபேசியில் தொடார்பு கொண்டேன்.
 பெயர் என்ன? அலைபேசி எண் என்ன? போன்ற வழக்கமான கேள்விகளுக்குப் பிறகு கதை சொல்ல ஆரம்பித்தேன்.
என் கதையின் நாயகன் S.J.சூர்யா. எல்லோரும் Outdoor game-ஐ வைத்து எடுத்தால், நம்மாளு  indoor game-ஐ வைத்து எடுக்கிறார் என்றேன்.
மிர்ச்சிக்காரர் சுதாரித்தார். ஹலோ, உங்க பேர் என்ன? செல்நம்பர் என்ன? என்று மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தார்.
அது ஒரு நேரடி நிகழ்ச்சி இல்லை என்பதும், அதை எடிட் செய்தே ஒலிபரப்புவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். நான் ஏன் அவர்களுடன் விளையாடப் போகிறேன்?
ரி, நாம் நமது சூர்யாவின் விளையாட்டிற்கு வருவோம். தொடர்ந்து கதை சொல்ல ஆரம்பித்தேன்.
நம்ம S.J.சூர்யா தேர்ந்தெடுத்த விளையாட்டு Chess. S.J.சூர்யா ஹீரோயினுடன் Chess விளையாடுகிறார். தோற்றவர், ஜெயித்தவருக்கு இருகன்னங்களிலும் முத்தம் தரவேணடும் என்பது பந்தயம்.
S.J.சூர்யா தோற்க, ஹீரோயினின் இரு கன்னங்களினும் முத்தம் கொடுத்ததோடு, உணர்ச்சி வசப்பட்டு அவரது நெற்றியிலும் ஒரு முத்தம் கொடுத்து விடுகிறார்.
ஏன் என் நெற்றியில் முத்தமிட்டாய்?” என ஹீரோயின் கோபமாகக் கேட்கிறார்.
S.J.சூர்யா என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்கிறார். பிறகு தனது வழக்கமான பாணியில் எதையோ சொல்லி சமாளிக்க முயல்கிறார்.
எதை சொல்லச் சொல்றே? சின்னவயசுல படிச்ச , ஞாபகம் வந்து , (அன்பே ஆருயிரே) - ன்னு ஒரு படமே எடுத்தேன்.
You want me to tell about that?
, ’ - ன்னதும் அக்கன்னா’ ( ஃ ) ஞாபகம் வந்துருச்சு. அதுதான் கன்னங்கள், நெற்றி என்று அக்கன்னா முத்தம் கொடுத்தேன்.
You want me to tell about that?
-என்று விளக்கியதும் ஹீரோயின் சமாதானம் ஆகிறார் என்று முடித்தேன்.
ஒரு மணிநேரம் கழித்து போட்டியின் முடிவைச் சொன்னார்கள்.
ரிசு பெற்ற இரண்டு நேயர்களில் முதலாவதாக என் பெயர் வாசிக்கப்பட்டது. Thanks to Mirchi.
Blogger Widgets