ads

Thursday, February 6, 2014

நேயர் விருப்பம் - சிறுகதை



நேயர் விருப்பம்

ஹலோ, வணக்கம். உங்க பேர் என்ன?”
என் பேர் கனகலட்சுமிங்க...
எங்கிருந்து பேசறீங்க?”
 தாம்பரத்திலிருந்து பேசறேன்...
 என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”
 நானா...? நான் சும்மா, ஹவுஸ் ஒய்ப்தாங்க...
 அதென்ன தயக்கமாகச் சொல்றீங்க?! ஹவுஸ் ஒய்ப்புன்னா அவ்வளவு இளக்காரமா?! வீட்டை பராமரிக்கிறதும், குழந்தைங்களை கவனிக்கிறதும் அவ்வளவு ஈஸியா என்ன?! எவ்வளவு பொறுப்பு?! எவ்வளவு கஷ்டம்?!
சரி, சரி உங்களுக்கு பிடிச்ச பாடல் ஒண்ணு சொல்லுங்க?”
தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிகழ்ச்சியில் பங்கேற்ற நேயர்களின் பாலினம், வாழும் சூழ்நிலை, மனநிலை அறிந்து, அவர்களின் விருப்பத்திற்கேற்ப இனிமையாகப் பேசி, நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திமுடித்தபின், தொகுப்பாளர் விமலா வீட்டை அடைந்தார்.
 அம்மா...என்று ஓடிவந்து கட்டிப்பிடித்த குழந்தையை துக்கிக்கொஞ்சும்போது, விமலாவின் மாமியார் கோபமாகக் கேட்டார்.
 ஏம்மா லேட்டு?”
 டிராபிக் ஜாம் அத்தைஅதுதான் லேட்டு.
 ஏம்மா இந்த வேலையை விட்ற வேண்டியதுதானே! இருக்கிற வசதி போதாதா? நீ சம்பாதிச்சு என்ன ஆகப்போகுது?”
அத்தைஉழைப்புங்கறது பணம் சம்பந்தப்பட்டது இல்லை. அது மனசு சம்மந்தப்பட்டது. ஹவுஸ் ஒய்ப்புங்கிற பேர்ல, வீடுங்கிற சின்ன வட்டத்தில் வாழ்ந்து, வெளியுலகம் தெரியாமல், உழைக்கவேண்டிய அவசியம் புரியாமல், வாழ்க்கையை வீணடிச்சிக்கிற சராசரி பெண் உங்களுக்கு அதெல்லாம் புரியாது...
வெடித்தாள் விமலா.
Blogger Widgets