ads

Thursday, February 6, 2014

“ம்” - சிறுகதை



“ம்”



ம்-முன்னு ஒரு வார்த்தை சொல்லு, உன்னை
எங்கேயோ கொண்டு போறேன்.
முதலாளி இதை நான்காவது தடவையாக சொல்கிறார். ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தாள் சுமதி.
அழகான தன்னை, அங்கீகாரம் இல்லாத துனைவியாக ஆக்க கார், ‘பங்களா’, ‘பாங்க் பேலன்ஸ் என ஆசை வார்த்தைகள் காட்டும் முதலாளியைப்பற்றி விதவைத்தாயிடம் பக்குவமாக சொன்னாள் சுமதி.
பகலெல்லாம் யோசித்து, யோசித்து புலம்பிய அந்த பாமரத்தாயின் பேச்சின் சாராம்சம் இதுதான். 'நல்லாயிருந்த மனுஷனுக்கு, திடீர்னு புத்தி இப்படி கோணலாயிடுச்சே! சரி, பலவருஷமா நமக்கு படி அளந்தவரை பகைச்சுக்க வேணாம். இங்க, நமக்கு சொத்தும் இல்லை. சொந்தமும் இல்லை. எங்க போனாலும் நம்மால் பிழைத்துக்கொள்ள முடியும். அதனால வேறு எங்காவது போய்விடுவோம். நமக்கு இந்த ஊரே வேண்டாம். ம்-முன்னு சொல்லுடி. கடவுளே! என் பொண்ணுக்கு குடும்பம், குழந்தைங்கன்னு ஒரு பாதுகாப்பு அமையறவரையிலாவது எனக்கு ஆயுளைக்குடு.
விசுவாசமா, பயமா, புத்திசாலித்தனமா - அம்மாவின் வார்த்தைகள் சுமதியைக் குழப்பின.
இரண்டு நாட்கள் கழித்து, அம்மாவின் தீர்வில் உள்ள உறுதியை தெரிந்துகொள்ள மீண்டும் கேட்டாள். அம்மாவின் ஒரே முடிவு இதுதான்.
 'ம்-முன்னு ஒரு வார்த்தை சொல்லு. உன்னை எங்கேயோ கொண்டு போறேன்.
ம்என்றாள் அம்மாவிடம்.
Blogger Widgets